Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
Hyderabadi Egg Curry Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா? எப்போதும் முட்டையை ஒரே மாதிரி குருமா அல்லது பொரியல்தான் செய்வீர்களா? முட்டையை இப்படி ஒரேமாதிரி சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்படியானால் ஒருமுறை முட்டையை வைத்து இந்த ஹைதராபாத் ஸ்டைல் முட்டை மசாலாவை செய்யுங்கள். இந்த ஹைதராபாத் ஸ்டைல் முட்டை மசாலா சப்பாத்தி, பூரி, தோசை என அனைத்திற்கும் செம காம்பினேஷனாக இருக்கும்.

இந்த ஹைதராபாத் முட்டை மசாலா ஹோட்டலில் சாப்பிடும் சுவையிலேயே இருக்கும். இப்படி வித்தியாசமான முட்டை மசாலா செய்தால், வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். முக்கியமாக இந்த ஹைதராபாத் ஸ்டைல் முட்டை மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இது பேச்சுலர்கள் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு ஹைதராபாத் ஸ்டைல் முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 வேகவைத்துத் தோல் உரித்த முட்டைகள்
- 3 ஸ்பூன் எண்ணெய்
- ¼ ஸ்பூன் கடுகு
- ¼ ஸ்பூன் சீரகம்
- 4 கீறிய பச்சை மிளகாய்
- 4 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 3 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மல்லித் தூள்
- ½ ஸ்பூன் சீரகத் தூள்
-2 ஸ்பூன் புளிக்கரைசல்
- 2 ஸ்பூன் புதினா இலைகள்
- 1 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் (அலங்கரிக்க)
அரைக்கத் தேவையானவை:
- 1 ஸ்பூன் வேர்க்கடலை
- 1 ஸ்பூன் தேங்காய் துருவல்
- 1 ஸ்பூன் எள்
செய்முறை:
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் வேர்க்கடலையைச் சேர்த்து வறுக்கவும்; பிறகு எள்ளைச் சேர்த்துச் சில நொடிகள் வறுத்து, அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து வறுத்து ஆறவிடவும்.
- அனைத்துச் பொருட்களையும் சேர்த்துப் பொடியாக அரைத்துக்கொள்ளவும்; அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும்.
- கடுகு மற்றும் சீரகம் சேர்த்து, அவை வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
- கடுகு வெடித்ததும் நீளமாக கீறிய பச்சை மிளகாய் மற்றும் வர மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, லேசாக பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
- இஞ்சி-பூண்டு பச்சை வாசனை போனதும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- அதன்பின் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் சீரகத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் மூடி போட்டு, குறைந்த தீயில் எண்ணெய் பிரியும் வரை மசாலாவை வேகவைக்கவும்.
- மசாலா அடிபிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறி விடவும்.
- பின்னர் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்க வைத்து, வேகவைத்த முட்டைகள், புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
- குழம்பு உங்களுக்கு தேவைப்படும் பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான ஹைதராபாத் ஸ்டைல் முட்டை மசாலா தயார். இது சாதம், புலாவ், சப்பாத்தி மற்றும் தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
