Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
கிராமத்து ஸ்டைல் கறிக்குழம்பு செய்ய தெரியுமா? இதோ ரெசிபி..!
மட்டன் ஆட்டுக்கறியாகும்.. தென் மாவட்டங்களில் இன்றும் இதனை ஆட்டுக்கறி என்றுதான் சொல்லுவார்கள். மட்டன் குழம்பை ஆட்டுக்கறிக்குழம்பு என்றே கூறுவர்... இது வளரும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியை மட்டுமில்லாமல் மூளை வளர்ச்சிக்கும் உதவும்.. இத்தகைய சிறப்பு வாய்ந்த மட்டன் குழம்பை கிராமத்து ஸ்டைலில் வைப்பது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
தேவையான பொருள்கள்
1. ஆட்டுக்கறி
2. பொடியாக நறுக்கிய தக்காளி
3. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
4. காய்ந்த மிளகாய்
5. எண்ணெய்
6. சோம்பு
7. உப்பு
8. பூண்டு
9. ஏலக்காய்
10. தேங்காய்
11. மஞ்சள் தூள்
12. பட்டை
13. லவங்கம்
14. கசகசா
15. மிளகு
16. தனியா
17. கருவேப்பிலை
18. கொத்தமல்லி இலை
19. கடுகு
20. சீரகம்
21. உளுந்து
22. கடலைப் பருப்பு

செய்முறை
1. முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு வைத்து இறக்க வேண்டும்.
2. ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு அதில் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு என அனைத்தையும் தனித்தனியே வறுத்து வைக்கவும்.
3. பின்னர் அதனுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் என அனைத்தையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
4. மறுபுறம் இன்னொரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கருவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு, சீரகம், உளுந்து, கடலைப் பருப்பு என அனைத்தையும் தாளிக்கவும்.
5. அதிலும், மேற்கண்டவற்றுடன் வெங்காயம், பூண்டு ஆகிய இவை இரண்டையும் போட்டு நன்கு வதக்கவும்.
6. அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
7. பின்னர் முன்பு வேகவைத்த ஆட்டுக் கறி தண்ணீரை, தக்காளியுடன் சேர்க்கவும்.
8. இப்பொழுது மேற்கண்டவையுடன் அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து எண்ணெய் நன்கு திரண்டு வரும் வரையில் கொதிக்க விடவும்.
9. நன்கு கொதித்த பிறகு கடைசியாக எண்ணெய்யில் வறுத்த கருவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி தழையை தூவினால் கிராமத்து ஸ்டைல் மட்டன் குழம்பு தாயார்..
10. உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என யாராக இருந்தாலம், மாதம் ஒருமுறையாவது, குறைந்த அளவில் மட்டன் சாப்பிட்டால், உடலுக்கு வலு கிடைக்கும்.. உடல் சூடு தணியும்.. சருமத்துக்கான பளபளப்பு கூடும்.. பார்வை கோளாறுகள் நீங்கும்..



Click it and Unblock the Notifications








