Latest Updates
-
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா? -
எச்சரிக்கை! இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா முகப்பரு அதிகமா வந்துடும்.. -
இந்தியாவில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள டாப் 5 மாநிலங்கள் - தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லையாம் தெரியுமா? -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க..
வீட்ல இட்லி ரொம்ப மீந்து போயிருச்சா? அப்ப இந்த மாதிரி டேஸ்ட்டான வடை செஞ்சுருங்க... டக்குனு காலியாகிரும்...!
வீட்டில் பெரும்பாலும் மீதமாகும் உணவுகளை வீணாக்காமல் நம் சாப்பிடு உடலை கெடுத்து கொள்ளவது நம்மில் பலரின் வழக்கம். இதற்கு காரணம், கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து, கிச்சனில் நேரம் எடுத்து சமைத்த உணவை வீணாக்க மனமில்லது தான். இதற்கான மாற்று வழியாக மீதமானவற்றில் பல மாற்றுவழிகளை கையாண்டாலும், சிறிது காலத்தில் அவை அலுத்துவிடும்.
நாம் மீண்டும் புதுமையை தேடி ஓட வேண்டி இருக்கும். அப்படி மிதமான இட்லி என்றவுடன், நமக்கு நியாபகம் வருவது சூரியவம்சம் படமும் அதில் கதாநாயகி செய்யும் உப்புமா-வும் தான். அன்றைய காலத்தில் வீடுகளில் இட்லி உப்புமா பேமஸ் ஆக இருக்க இதுவும் காரணமாக இருந்தது.

இப்போதை குழந்தைகளிடம் இட்லி உப்புமா என்றால், நம்மை ஏற இறங்க பார்ப்பார்கள். இன்றை குழந்தைகளை ஏமாற்றி, மிதமான இட்லியை செல்லுபடியாக்க நாம் இந்த முறையை கையாளலாம். அப்படி என்ன செய்ய போறீங்கன்னு கேக்கறது புரியுது. மிதமான இட்டிலியை வைத்து ஈஸியா செய்யலாம் இட்லி வடை. எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மீதமான இட்லி - 3
சின்ன வெங்காயம் - 12 - 15
மிளகு - ¼ ஸ்பூன்
சீரகம் - ¼ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 அல்லது 2 (காரத்திற்கு ஏற்ப சேர்த்து
கொள்ளவும்)
இஞ்சி - ½ ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
அரிசிமாவு - ½ ஸ்பூன்
ரவை - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
செய்முறை:
இட்லி கடினமாகவோ அல்லது வறண்டது போல் இருந்தால், சிறிதளவு நீரில் 5 நிமிடங்கள் போட்டு வைக்கவும். பச்சைமிளகாய், இஞ்சி, மற்றும் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். கருவேப்பில்லை மற்றும் கொத்தமல்லியை நறுக்கி கொள்ளவும். நீரில் சேர்த்த இட்லியை தனியே எடுத்து நன்றாக உடைத்து விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம், ரவை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
இதனுடன் தேவைக்கு ஏற்ப சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும். சிறிது தண்ணீர் அதிகமா இருந்தால் அதற்கு ஏற்ப அரிசிமாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும். இந்த கலவையை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். பின், பொறிக்க தேவையான எண்ணெயை அடுப்பில் வைத்து, நன்றாக எண்ணெய் காய்ந்ததும், உருண்டைகளை கையால் அழுத்தி, அதில் ஓட்டை போட்டு எண்ணையில் சேர்த்து பொரிக்கவும். சுவையான இட்லி வடை ரெடி.



Click it and Unblock the Notifications
