Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
பூரி மற்றும் தோசைக்கு சைடிஷ் செய்ய ரொம்ப கஷ்டப்படுறீங்களா? இந்த 10 நிமிஷ ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க...!
சிலருக்கு சமைக்க பிடிக்கும், சிலருக்கு நன்றாக ருசித்து சாப்பிட பிடிக்கும். நம்ம எல்லோருக்கும் அம்மா சமையல் தெரியும். ஆரோக்கியமான சுவையான உணவு அம்மாவின் அன்போடு நம்ம தட்டுக்கு வரும் போது அற்புதமாதான் இருக்கும். ஆனா, இப்போ கணவன், மனைவின்னு இரண்டு பேரும் வேலை வேலைனு சம்பாத்தியத்துக்காக ஓட வேண்டி இருக்கு. இந்த அவசர உலகத்துல சாப்பாடு அப்படிங்கறது நகரத்துல ஹோட்டல்ல கிடைக்க கூடிய ஒண்ணாதான் மாறிக்கிட்டு இருக்கு.

இதுக்கு காரணம் வீட்டில சமைக்க நேரம் இல்லாத காரணத்தாலதான் பெரும்பாலான மக்கள் ஹோட்டலை நோக்கி ஓடுறாங்க. அது ஆரோக்கியமானதா இல்லைனு தெரிஞ்சும், தொடர்ந்து அதையே செய்து உடல் ஆரோக்கியம் கெட்டுப்போன அப்புறம் வீட்ல சமைக்க ஆரம்பிப்பாங்க. பெரும்பாலும், நகரங்களுக்கு வர பசங்க வெளிய தான் சாப்பிடறாங்க. அவங்களுக்கு சமைக்கவும் தெரியாது.
பூரி மற்றும் தோசை போன்றவை எளிதில் செய்யக்கூடிய டிபனாக இருக்கலாம், ஆனால் அதற்க்கு சைடிஷ் செய்வதே மிகவும் சவாலான ஒன்றாகும்.நேரம் இல்லாதவங்களுக்கும், சமைக்க தெரியாதவர்களும் கூட எளிமையாக சமைக்கக் கூடிய பாம்பே பூரி மசாலாவும், அவசர சட்டினியும் எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
பாம்பே பூரி மசாலா:
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
கஸ்தூரி மேத்தி - ½ ஸ்பூன்
மிளகாய் தூள் - ½ ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப)
மல்லி தூள் - ¼ ஸ்பூன்
கரம் மசாலா - ¼ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- குக்கரில் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி நன்றாக மசித்து கொள்ளவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும், அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மற்றும் காரம் மசாலா சேர்க்கவும்.
- பின் அதனுடன் நன்றாக மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.சட்டுனு செய்ய கூடிய சுவையான பூரி மசால் ரெடி.
அவசர சட்னி:
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 6 பல்
வரமிளகாய் - 5 (காரத்திற்கு ஏற்ப)
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தாளிக்க
உளுந்தம் பருப்பு - தாளிக்க
கடலைப்பருப்பு - தாளிக்க
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- வெங்காயம், தக்காளி, பூண்டு, மற்றும் வரமிளகாயுடன் தேவையான அளவு
உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மற்றும்
கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
- பின், அதில் சட்டினியை சேர்த்து லேசாக கொதிக்க வைத்தால், நம் எளிதான
மற்றும் சுவையான அவசர சட்னி ரெடி.



Click it and Unblock the Notifications
