Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
இந்த சண்டே இந்த மீன் குழம்பை ட்ரை பண்ணுங்கள்..!
காரமான சுறா பூண்டுக் குழம்பை இந்த சண்டே உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.. இதில் புரதங்கள் மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது.. வாங்க இந்த குழம்பை எப்படி செய்வது என்று ரெசிபியை தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்
1. சுறா மீன்
2. தக்காளி
3. வெந்தயம்
4. கடுகு
5. பச்சை மிளகாய்
6. கருவேப்பிலை
7. கொத்துமல்லி இலை
8. மிளகுத் தூள்
9. சின்ன வெங்காயம்
10. எண்ணெய்
11. மஞ்சள் தூள்
12. தனியாத் தூள்
13. மிளகாய்த் தூள்
14. சீரகத் தூள்
15. புளி
16. முழுப்பூண்டு
17. உப்பு

செய்முறை
1. முதலில் புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.
2. பிறகு சுறா மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
3. இப்போது கழுவிய சுறாமீனை துண்டுகளாக நறுக்கவும்.
4. பூண்டை உரித்துக் கொண்டு, அதனுடன் வெங்காயம், தக்காளி ஆகிய இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும்.
6. எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து நன்கு தாளிக்கவும். பின்னர் மேற்கண்டவற்றுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
7. அத்துடன் பூண்டு, தக்காளி, மிளகாய் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். மேல் வதக்கியவற்றுடன் சுறா மீன் துண்டுகளை சேர்த்து மேலும் நன்கு வதக்கவும்.
8. மீன் துண்டுகள் அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்.
9. அதன் பிறகு மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் மற்றும் புளிக் கரைசல் ஆகிய இவற்றையும் சேர்த்து ஊற்றி அத்துடன் மிளகுத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் படியாக கொதிக்கவிடவும்.
10. இப்போது காரசாரமான சுறா மீன் குழம்பு ரெடி..



Click it and Unblock the Notifications
