Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
சட்டுனு சமையல்: தமிழ்நாட்டு சதக் சட்னியும், கடப்பா கருவேப்பிலை சட்னியும்... 5 நிமிசத்துல செஞ்சு அசத்துங்க...!
சட்டுனு சமைக்கலாம் டக்குனு கிளம்பலாம்னு, ஈஸியா செய்யக்கூடிய சில சட்னி வகைகள் உள்ளன. இந்த பதிவில் தமிழ்நாடு சதக் சட்டினியும், கடப்பா கார சட்டினியும் தான் பாக்க போறோம். இந்த சதக் சட்னிய 5 நிமிஷத்துக்குள்ள ஈஸியா செய்யலாம். இட்லி தோசைக்கு பக்கவா பொருந்தும். கருவேப்பிலைய விரும்பி சாப்பிடறவங்கள விட தூக்கி போடறவங்க தான் அதிகம்.
அதில் எவ்வளவு மருத்துவ பயன்கள் இருந்தாலும் சாப்பிட மாட்டார்கள். அப்படி தூக்கி போடறவங்கள கருவேப்பிலைனு தெரியாம சாப்பிட வைக்க எளிமையா இருக்கும் இந்த கடப்பா கருவேப்பிலை சட்னி சிறந்த வழியாக இருக்கும். இது இட்லி, தோசை, மற்றும் சாதம்னு அனைத்துக்கும் அட்டகாசமா இருக்கும். வாங்க அதை எப்படி செய்யலாம்னு வாங்க தெரிஞ்சிக்கலாம்.

சதக் சட்னி:
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1
தக்காளி - 1
உளுந்து - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப)
காஷ்மீர் மிளகாய் - 2 (நிறத்திற்காக)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
-வெங்காயத்தை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நறுக்கி கொள்ளவும்.
-பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
-அதில் மிளகாயை சேர்த்து வறுத்து, தனியே எடுத்து வைத்துவிடவும்.
-மீதமுள்ள எண்ணெயில் உளுந்து சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை
வதக்கவும்.
-பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் நன்கு பழுத்த தக்காளியை
சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
-அதன் பின் மிக்ஸி ஜாரில் வறுத்த மிளகாய், வதக்கிய வெங்காயம், தக்காளி
சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு அரைத்தால் சதக் சட்டினி
ரெடி!
கருவேப்பிலை சட்னி:
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2
எள்ளு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (காரத்திற்கு ஏற்ப)
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் - ¼ மூடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
கருவேப்பிலை - 2 கைப்பிடி
புளி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - ¼ ஸ்பூன்
கடலைப்பருப்பு - ¼ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ¼ ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
-நன்றாக பழுத்த நாட்டு தக்காளி இரண்டை நான்கு துண்டுகளாக நறுக்கி
கொள்ளவும்.
-தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ அரைப்பதற்கு ஏற்றவாறு எடுத்து
கொள்ளவும்
-பாத்திரத்தில் அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
-எண்ணெய் காய்ந்ததும் அதில் தக்காளியை சேர்த்து நன்கு குழையும் படி
வதக்கி, வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிடவும்.
-மீண்டும் அதே பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய்ந்ததும்
அதனுடன் எள்ளை சேர்க்கவும். பின் -அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் தோல்
சீவிய இஞ்சி துண்டை சேர்த்து வதக்கவும்.
-அதனுடன் நறுக்கிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறவும். தேங்காய்
சிறிதளவு நிறம் மாறியதும், அத்துடன் கொத்தமல்லி இலையை சேர்த்து
வதக்கவும்.
-பின் அதனுடன் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி ஆறவிடவும்.
-இவை நன்றாக ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் சிறிதளவு
உப்பு, மற்றும் வதக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக அரைத்து
கொள்ளவும்.
-பின் பாத்திரத்தில் தாளிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து
காய்ந்ததும், கடுகு சேர்த்து பொரிய விடவும்.
-அதன் பின் கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின் அதனுடன் சிறிது பெருங்காயத்தூள், சட்டினியுடன் சேர்க்கவும். சுவையான கடப்பா கருவேப்பில்லை சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
