Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
ஆடி 18க்கு இந்த பாயசம் செஞ்சு அசத்துங்க..! இதோ ரெசிபி..!
பாயசம் என்பது விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவு ஆகும். தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கியமான உணவாகும். அதிலும் திருமணத்தில் பாயாசம் இல்லாமல் இருக்காது.. பேச்சு வழக்கில் பாயசத்தை பாயாசம் என்று சொல்ல ஆரம்பித்த்விட்டனர்.. இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு.
பால் பாயசத்தைப் பால், சவ்வரிசி, சேமியா முதலியவற்றைக் கொண்டு செய்கிறார்கள். பொதுவாக இதனுடன் உளுந்து வடையையோ பொடித்த அப்பளத்தையோ சேர்த்து உண்பார்கள். விருந்துகளில் நிறைப்புணவாகப் (Dessert) பரிமாறுவதற்கும், சீக்கிரமாக நாம் சாப்பிட்ட உணவுகள் செரிமானமடையும் மென்றுவிழுங்குவதில் சிரமமுள்ளவர்களுக்கும் நல்ல உணவாக பாயசம் பயன்படுகிறது.

அத்தகைய பாயசத்தை தமிழர்கள் கண்டிப்பாக ஆடி 18ஆம் பெருக்கு விழாவிற்கு செய்வார்கள்.. தற்போது பொரும்பாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகரித்துவிட்டனர்.. அதனால் அவர்களுக்காகவும் ஏற்ற ஒரு பாயசத்தைதான் நாளை ஆடிப்பெருக்கில் செய்ய போகிறோம்.. அது சாமை பாயசம்தான்..
சாமை அரிசியின் நன்மைகள்
காய்ச்சலினால் ஏற்படும் நாவறட்சியை போக்கும். வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். ஆண்களின் இனப்பெருக்க அணு உற்பத்திக்கும், ஆண்மைக் குறைவை நீக்கும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வர முதன்மை பங்கு வகிக்கும்.
புரத சத்துக்களைக் கொண்ட சாமை பாயசம் செய்ய தேவையான பொருள்கள்:
1. நன்கு அலசி சுத்தம் செய்யப்பட்ட சாமை அரிசி
2. பால்
3. வெல்லம்
4. ஏலக்காய்
5. கேசரி பொடி
6. முந்திரி மற்றும் பாதாம்
7. நெய்
8. திராட்சை
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக சுட வைக்கவும்.
2. இப்பொழுது தேவையான கேசரி பொடியை அதில் சேர்க்கவும்.
3. பின்னர் பாலுடன் கேசரிப் பொடி கொதிக்கும் சமயத்தில், கழுவப்பட்ட சாமையை கட்டி ஆகாமல் சிறிது, சிறிதாக சேர்க்கவும்.
4. அதன் பிறகு சாமை நன்றாக வேகும் வரையில் கிண்டவும்.
5. மறுபுறம் ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீருடன் வெல்லத்தை போட்டு நன்றாக கரைத்துப் பாகு செய்யவும்.
6. இப்பொழுது அந்த வெல்லப் பாகை மண் இல்லாத படி வடித்து மேற்கண்ட சாமையில் சிறிது, சிறிதாக சேர்க்கவும்.
7. அதன் பிறகு மேற்கண்டவற்றை நன்கு அடிப்பிடிக்காமல் கிண்டி ஏலக்காய் பொடியை அதில் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
8. இதே சமயத்தில் இன்னொரு வாணலியில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி, பாதாம், திராட்சை என அனைத்தையும் பொரித்து மேற்கண்டவற்றுடன் சேர்த்து நன்கு கிண்டி அடுப்பில் இருந்து இறக்கவும்.
9. இதோ இப்போது சுவையான சாமை பாயசம் ரெடி.
10. வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி இதனை செய்து கொடுத்து வர தசையை வளர்க்கும். எலும்புகளை உறுதிப்படுத்தும்.



Click it and Unblock the Notifications











