Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
சத்துக்கள் நிறைந்த கேழ்வரகு அடை செய்ய தெரியுமா?
இந்த தலைமுறையினர் கேழ்வரகு என்றால் என்ன? என்று கேட்பார்கள்.. அந்த அளவிற்கு நம் பாரம்பரியம் அழிந்துக் கொண்டிருக்கிறது.. கேழ்வரகு இலாமல் ஒருநாளும் சாப்பிடமாட்டார்கள் நம் பண்டைய தமிழர்கள்.. இதை சாப்பிட்டால் எந்தவித நோயும் வராது.. தென் தமிழகத்தில் கிராமங்களில் இன்றும் இது முக்கியமான காலை உணவாக செய்து சாப்பிடுகிறார்கள்..
அத்தகை இந்த கேழ்வரகு சிறுதானிய வகைகளில் ஒன்றாகும். இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவி செய்கிறது. கேழ்வரகு வைத்து களி, புட்டு, தோசை, அடை, கூழ் என பல வகையான உணவுகளை சமைக்கலாம்... கேழ்வரகு சேர்த்து செய்யப்படும் எந்த வகை உணவாக இருந்தாலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் சத்தான ஆரோக்கியமான கேழ்வரகு அடை செய்வது எப்படி என்பது குறித்து இதில் பார்க்கலாம். ஆம் இன்று கேழ்வரகு அடை எப்படி செய்வது என்பது பற்றிதான் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ள போகிறோம்..

தேவையான பொருள்கள்
1. கேழ்வரகு மாவு
2. வெல்லம்
3. துருவிய தேங்காய்
4. தோல் நீக்கிய ஏலக்காய்
செய்முறை
1. வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணீரில் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அடிப் பிடிக்காமல் கரைய விட வேண்டும்..
2. வெல்லம் கரைந்தவுடன் அதை இறக்கி வைத்து மண் வராத மாதிரி வடி கட்ட வேண்டும்..
3. வடிகட்டின வெல்ல நீரில் தேங்காய்த் துருவல், ஏலக்காய், கேழ்வரகு மாவு இவற்றைப் போட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கிளற வேண்டும்..
4. சுமார் ஐந்து நிமிடங்கள் கிளறி மாவு பாதி வெந்தவுடன் கீழே இறக்கி வைக்க வேண்டும்..
5. தேவைப்பட்டால் அல்லது மிகவும் உதிரியாக இருந்தால் சிறிது தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ள வேண்டும்.. அதன் பிறகு ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு இலையின் மேல் எண்ணெய் தடவி வைத்து மெல்லியதாகச் சிறிது பெரியதாக பக்குவமாக தட்டி தோசைக் கல்லில் போட வேண்டும்..
6. பின்னர் இதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றித் திருப்பிப் போட்டு வெந்தவுடன் எடுக்க வேண்டும்.. இதில் இலைக்கு பதில் சுத்தமான பாலித்தீன் கவரில் கூட சிறிது எண்ணெய் தடவி அடை தட்டலாம்..
6. இதோ இப்போது சுவையான கேழ்வரகு அடை ரெடி. இதனை அடிப்படையாகக் கொண்டு கோதுமை மாவையும் கூட பயன்படுத்தி நாம் அடை செய்யலாம்.சுவை சும்மா சூப்பராக இருக்கும்.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்..
கேழ்வரகு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். சர்க்கரை வியாதியை கூட கட்டுப்படுத்தலாம். ஊட்டச்சத்து மிகுந்தது.. உடலுக்கு வலு கொடுக்கும் இந்த ராகி அடையை முருங்கைக் கீரையுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்..



Click it and Unblock the Notifications