Latest Updates
-
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும் -
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா
மூட்டு வலிகளுக்கு உகந்த முடக்கத்தான் தோசை.. இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்கள்..!
முடக்கத்தான் கீரையில் தோசை செய்து சாப்பிட்டுயிருக்கீங்களா? இந்த தோசையை தென் மாவட்ட மக்கள் இன்றும் வாரம் ஒருமுறையாவது செய்து சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கீறார்கள். அதனால்தான் என்னவோ அவர்களுக்கு அவ்வளவாக முலங்கால் கை வலிகள் வராது.. மூட்டு வலியும் வராது..
அதற்கு காரணம் , இந்த முடக்கதான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிகமாக இருக்கு. இதை உணவுல தொடர்ந்து சேர்த்துட்டு வந்தால் வாத நோய்கள் வராது.. அதிலும் இந்த வாத நோய்கள் மழை மற்றும் குளிர் காலங்களான ஆகஸ்ட், செப்டம்பர் , அக்டோபர் மற்றும் டிசம்பரில்தான் அதிகமாக வரும் என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த முடக்கத்தான் கீரை, வாத நோய்களுக்கு நல்ல தீர்வா இருக்கும். அதனால் இந்த மழை மற்றும் குளிர் காலத்தில் கண்டிப்பாக இந்த கீரையை எடுத்துக்கோங்க.. வாங்க இந்த ம்டக்கத்தான் கீரையில் தோசை எப்படி செய்வது என்பது குறித்த ரெசிபியை பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்
1. அரிசி
2. வெந்தயம்
3. எண்ணெய்
4. உப்பு
5. முடக்கத்தான் இலை
செய்முறை
1. முதலில் அரிசியை சுத்தம் செய்து கல் நீக்கிக் களைந்து சில மணி நேரங்களுக்கு நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
2. அவ்வாறு நன்கு ஊற வைத்த அரிசியுடன் வெந்தயம், முடக்கத்தான் இலை ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு பக்குவத்தில் உடன் உப்பும் சேர்த்து அரைத்து, கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்..
3. பின்னர் அரைத்த மாவை புளிக்க வைத்து தோசையாக வார்த்து சாப்பிட பித்தம் தணியும்.
முடக்கத்தான் மூட்டு வலியை போக்கும் தன்மை கொண்டது. நாற்பது வயதைக் கடந்தவர்கள் இதனை அதிகம் சேர்த்துக் கொள்ளுவது நல்லது. அதுமட்டுமல்லாமல் இந்த முடக்கத்தான் கீரையை ரசமாகவும் வைக்கலாம்.. மாலை நேரத்தில் பருக நல்ல சூப்பாகவும் செய்துக் கொடுக்கலாம்.. எப்படி குடித்தாலும் இந்த கீரை உடலுக்கு நல்லது.. அதனால் இந்த ரெசிபியை வாரம் ஒருமுறை உங்க வீட்டில் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் செய்துக் கொடுப்பது நல்லது..
முடக்கத்தான் கீரையின் பயன்கள்
1. முடக்கத்தான் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் உண்டு வந்தால் சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும வியாதிகள் குணமாகும். இந்தக் கீரையை அரைத்து சருமத்தில் பூசி வந்தாலும் சரும நோய்கள் குணமாகும்.
2 . முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராததுடன், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி நெல்லிக்காய் அளவு எடுத்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர குடலிறக்கம் குணமாகும்.
3. முடக்கத்தான் கீரையை அரைத்து சாறு எடுத்து காதில் இரண்டு சொட்டு விட்டால் காது வலி குணமாகும்.
4. முடக்கத்தான் கீரை வாய்வு தொல்லையை நீக்கி மலச்சிக்கலை தீர்க்கும்.
5. முடக்கத்தான் கீரை நரம்புத் தளர்ச்சியை நீக்கி, நரம்புகள் வலிமை பெற உதவும்.



Click it and Unblock the Notifications