Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
உங்களுக்கு ரோட்டு கடை காளான் மசாலா ரொம்ப பிடிக்குமா? வீட்டிலேயே செய்யலாம் .. இதோ ரெசிபி..!
சாலை ஓரத்தில் தள்ளுவண்டி கடையில் விற்க்கப்படும் இந்த காளான் செம்ம சுவையான டேஸ்டாக இருக்கும்.. ஆனால் இந்த காளான் மசாலாவை சாப்பிட்டால் வயிற்று வலி உள்ளிட்ட சிக்கல் ஏற்படலாம். அது அவ்வளவு ஆரோகியமாக இருக்குமா? என்றால் சந்தேகம்தான்.. இதனால் இந்த காளான் மசாலாவை சுத்தமாவும் ஆரோக்கியமாக்வும் நம் வீட்டில் செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுத்தால் செம்மையா இருக்கும்.. இதை வீட்டிலேயே ரொம்ப சுலபமாக செய்ய இதோ ரெசிபி....
இந்த ரெசிபியில் காளான் மற்றும் முட்டை கோஸ் சேர்க்கப்படுகிறது.. இந்த முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது. அதுபோலவே காளான் எனப்படும் மஷ்ரூம் , புரதங்கள், லிப்பிடுகள் மற்றும் பினாலிக் கலவைகள் போன்ற உயிர்வேதியியல் கலவைகள் உள்ளன, அவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.

தேவையான பொருட்கள்
1. காளான் 250 கிராம்
2. 2 பெரிய வெங்காயம்
3. 2கப் பொடியாக நறுக்கிய கோஸ்
4. கான்பிளவர் மாவு கால் கப்
5. சோயா சாஸ் 3 ஸ்பூன்
6. தக்காளி சாஸ்
7. ரெட் சில்லி சாஸ்
8. எண்ணெய்
9. உப்பு
10. மிளகு தூள்
11. இஞ்சி - பூண்டு விழுது
12. கரம் மாசாலா
13. மிளகாய் தூள்
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் கோஸ் மற்றும்காளானை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கருவெப்பிலையை நறுக்கி 2 கொத்து சேர்க்கவும். 3 ஸ்பூன் கான்பிளவர் மாவையும் இதில் கலந்து விட வேண்டும்.. அத்துடன் அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
2. அதனைத் தொடர்ந்து 1 ½ ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து அந்த கலவையை நன்றாக பிசையவும். இதை தொடர்ந்து இதில் தண்ணீர் தெளித்து பிசையவும். பின்னர் இதை எண்ணெய்யில் பொறித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்..
3. அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்தவுடன் அதில் இஞ்சி - பூண்டு விழுது 1 ஸ்பூன் சேர்க்க வேண்டும்... இதை நன்றாக வதக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து அதையும் நன்றாக வதக்க வேண்டும்..
4. வெங்காயம் பிரவுன் நிறமாக மாற வேண்டும். பின்ன்ர் அதில் கருவேப்பிலை, கரம் மசாலா சேர்த்து கிளறவும். அதன் பிறகு அதில் மிளகு பொடி சேர்க்கவும். தொடர்ந்து தண்ணீர் 250 எம்.எல் சேர்க்கவும். அதன் பிறகு இதில் 2 ஸ்பூன் தக்காளி சாஸ், சோயா சாஸ் 2 ஸ்பூன், ரெட் சில்லி சாஸ் 1 ஸ்பூன் கலந்து விட வேண்டும்..
5. பின்னர் அதில் தண்ணீர் நன்கு குறையத் தொடங்கும் போது வறுத்த கோஸ் மஷ்ரூமை எடுத்து அதில் சேர்க்கவும். தொடர்ந்து 15 நிமிடங்கள் இந்த அனைத்து கலவையும் வதக்க வேண்டும். இதற்கு மேலாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறிது கார்ன் சிப்ஸ் தூவி விட்டு பரிமாறலாம்.. அப்படியே ரோட்டுக் கடை ஸ்டைலில் செமையாக ருசியாக இருக்கும்.. குழந்தைகள் மீண்டும் மீண்டும் செய்துக் கொடுக்க சொல்லிக் கேட்பார்கள்..



Click it and Unblock the Notifications





