Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
இருமல், சளியை விரட்டும் துளசி ரசம் செய்ய ரெசிபி..!
மழைகாலம் தொடங்கி விட்டாலே எங்கு பார்த்தாலும் குழந்தைகளுக்கு சளி, இருமல், தொண்டை வலி, தலை பாரம் என தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும்.. அவற்றில் இருந்து விடுபடவும், அவை வராமல் தடுக்கவும் இந்த துளசி ரசத்தை வாரம் ஒருமுறையாவது உங்கள் வீட்டில் வைத்து கொடுங்கள்.. முக்கியமாக இந்த துளசி ரசம் குழந்தைகளுக்கு ஏற்றது..
காரணம் துளசியில் மருத்துவ குணங்கள் பல நிறைந்துள்ளது.. துளசியில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன, அவை சளி, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பொதுவான நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. சரி வாங்க இந்த துளசி ரசத்தை எப்படி வைப்பது என ரெசிபியை தெரிந்துக் கொள்ளலாம்..

தேவையான பொருள்கள்
1. துளசி இலை
2. மிளகு
3. புளி
4. கடுகு
5. எண்ணெய்
6. உப்பு
7. துவரம் பருப்பு
8. தனியா
9. சீரகம்
செய்முறை
1. முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம் பருப்பை ஊற வைக்கவும்.
2. புளியை மண் இல்லாமல் நன்றாகக் கரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அப்படியே மறுபக்கத்தில் துளசி இலைகளை நன்றாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்..
3. பின்னர் ஊற வைத்த பொருட்களை மிக்சியில் அரைத்துப் புளிக் கலவையுடன் சேர்க்கவும்.
4. இப்போது ஒரு கொதி வந்த மாத்திரத்தில் துளசியையும் அரைத்து மேற்கண்ட புளிக் கலவையுடன் சேர்த்து நுரைத்ததும் இறக்கி வைக்கவும்.
5. பின்னர் எண்ணெய்யில் கடுகையும் தாளித்து அதில் கொட்டிக் கலக்கவும்.
6. இதோ இப்போது சுவையான துளசி ரசம் தயார். இது இருமல், சளிக்கு நல்ல மருந்தாக இருக்கும். முக்கியமாக குழந்தைகளுகு ஏற்ற ரசமாகும்..
இருமல், சளி ஆகிய இவற்றை கட்டுப்படுத்தி தேவை இல்லாத கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்ற துளசி ரசம் உதவுகிறது.



Click it and Unblock the Notifications
