Latest Updates
-
வரலாற்றின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவரின் ஒரு பயணம் எப்படி உலக வரலாற்றை மாற்றியது தெரியுமா? -
உடல் சூட்டை டக்கென்று குறைக்கும் டாப் 3 உணவுகளை பட்டியலிட்ட சித்த மருத்துவர் - அது என்னென்னன்னு பாருங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க… கோடை வெயிலிலும் பணவரவு குறையாம இருக்க ரகசியம்! -
1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு செல்லும் புதன்: நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
India Heatwave Alert: இந்தியாவில் வெயில் உச்சத்தில் இருக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா? -
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி!
வாயுத் தொல்லையை நீக்கும் இஞ்சித் துவையல்.. இதை ஒருமுறை வீட்டில் ட்ரை பண்ணுங்கள்..!
இஞ்சி துவையல் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. இதனை இந்த மழைக்காலங்களில் செய்து சாப்பிட்டால் உடலுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்..
இந்த இஞ்சி துவையல் ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் தடுக்கிறது. தலைவலியைப் போக்கி ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைத்து, மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மிக முக்கியமாக மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. சுவையான இஞ்சி துவையல் எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளாலாம் வாங்க..
தேவையான பொருள்கள்
1. இஞ்சி
2. உளுத்தம் பருப்பு
3. மிளகு
4. உப்பு
5. புளி
செய்முறை
1. முதலில் இஞ்சியை தோல் எடுத்துப் பொடிப் பொடியாக நறுக்கி சுத்தம் செய்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
2. அதே போல உளுத்தம் பருப்பு, மிளகு, உப்பு, புளி ஆகிய இவை அனைத்தையும் சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
3. பிறகு வதக்கிய இஞ்சியையும் மற்ற சாமான்களையும் மிக்சியில் போட்டு மைய அரைக்க வேண்டும்.
4. இதோ இப்போது சுவையான இஞ்சித் துவையல் தயார். இது பித்த வியாதிகளுக்கு நல்லது. இஞ்சித் துவையல் அடிக்கடி செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
5. இந்த இஞ்சி துவையலை இட்லி , தோசை, மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.. ருசியாக இருக்கும்.. சிறு குழந்தைகளுக்கும் சற்று காரம் சேர்க்காமல் கொடுக்கலாம்.. அதனால் அடிக்கடி சளி புடிக்காது..
இஞ்சியின் நன்மைகள் இதோ
1. விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது.
2. ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
3. நீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
4. பல்வலி இருக்கும்போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
5. இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும்.



Click it and Unblock the Notifications











