Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஸ்பெஷல் காலிஃபிளவர் புலாவ் செய்ய ரெசிபி..!
அரிசி உணவுகள் எப்பொழுதும் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் செய்துவிடலாம்.. குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் அரிசி வகை உணவுகளைதான் செய்வார்கள்.. அப்படிப்பட்ட சாதம் ரெசிபிகளில், தக்காளி சாதம், ஆலு சாதம், ஜீரா ரைஸ் ஆகியவை மிகவும் பொதுவான உணவுகளாகும். காலிஃபிளவரிலும் சுவையான சாதம் செய்யலாம் தெரியுமா? ஆம் வாங்க இந்த பதிவில் காலிஃபிளவர் ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்..
காலிஃபிளவரில் உள்ள நன்மைகள்
ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி இந்த காலிஃபிளவர்.. இதில் வைட்டமின் சி, கே மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு காலிஃபிளவர் பயனுள்ள சத்துகளை கொடுக்கிறது.. மேலும் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும், கருவின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவியாக இருக்கும். எனவே கர்ப்பிணிகள் இதனை வழக்கமான உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

காலிஃபிளவர் புலாவ் செய்ய் தேவையானவை
காலிபிளவர் - 2 கப்
அரிசி - 2 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 / 4 டீஸ்பூன்
உப்பு: சுவைக்கு போதுமான
எண்ணெய்: போதுமானது
செய்முறை:
1. முதலில் அரிசியை சமைத்து வைத்துக் கொள்ள வேண்டும்..
2. பிறகு கடாயில் சிறிது தண்ணீர், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து காலிஃபிளவர் சேர்த்து 10 நிமிடம் வதக்க வேண்டும்..
3. 10 நிமிடம் கொதித்ததும் தண்ணீரை வடித்து காலிஃப்ளவரை தனியாக வைக்கவும்.
3. இப்போது மீண்டும் காலிஃப்ளவரை நல்ல தண்ணீரில் கழுவி தனியாக வைக்கவும். காலிஃபிளவர் ஆறிய பிறகு, விரும்பிய அளவில் வெட்டிக் கொள்ளவும்.
4. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காலிஃப்ளவரை பொன்னிறமாகும் வரை வறுத்து, தனியே வைக்கவும்.
5. மற்றொரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்.
6. இப்போது முன்பு வறுத்த காலிஃப்ளவரை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.. ஒரு முறை வதங்கிய பின் அதனுடன் அரிசியை சேர்த்து வதக்க வேண்டும்..
7. முழு கலவையை கலக்கும்போது 1/4 டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து முழு கலவையையும் வதக்கவும்.
8. இறுதியாக கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். அவ்வளவுதான், சுவையான மற்றும் சூப்பரான காலிஃபிளவர் சாதம் தயார். இது மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு சப்பிடலாம்.. முக்கியமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் அலுவலகம் செல்லும் கணவன் அல்லது மனைவிக்கும் ஏற்ற சூப்பரான லஞ்சாக இருக்கும்..



Click it and Unblock the Notifications