Latest Updates
-
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க! -
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்! -
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க..
தோசைக்கு எப்பவும் சட்னி, சாம்பார்ன்னு செய்யாம.. ஒருவாட்டி கத்திரிக்காயை கடைஞ்சு சாப்பிடுங்க.. டக்கரா இருக்கும்
Kathirikai Kadayal Recipe In Tamil: வீட்டில் இட்லி, தோசைக்கு எப்பவும் சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காயை கடைந்து சாப்பிடுங்கள்.
ஆம், கத்திரிக்காய் கடையல் இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கத்திரிக்காய் கடையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை வரிக் கத்திரிக்காய் - 200 கிராம்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - பெரிய எலுமிச்சை அளவு (1/2 கப் நீரில் ஊற வைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கத்திரிக்காயை சற்று பெரிய துண்டுகளாக்கி நீரில்
போட்டுக் கொள்ள வேண்டும். பின் பெரிய எலுமிச்சை அளவு புளியை 1/2 கப்
நீரில் ஊற வைத்து, பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை எடுத்து, அதில் நறுக்கிய கத்திரிக்காய், 1 பெரிய
தக்காளி, காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய், 2 சின்ன வெங்காயம், 1/4
டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கத்திரிக்காய் மூழ்கும் அளவில் நீரை
ஊற்றி குக்கரை மூடி, அடுப்பில் வைத்து 4 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு நன்கு கடைந்து விட
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட
வேண்டும்.
* இறுதியாக மசித்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து கலந்து, 5
நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி
இறக்கினால், சுவையான கத்திரிக்காய் கடையல் தயார்.



Click it and Unblock the Notifications
