Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
வைட்டமின்கள் நிறைந்த கம்பு, வெஜிடபிள் சூப்.. இந்த மழைக்கு இதமாக இருக்கும்.. ட்ரை பண்ணுங்கள்..
மழைக் காலத்தில் நம் அனைவருக்கும் கண்டிப்பாக காய்ச்சல் அல்லது சளி வராமல் இருக்காது.. அப்படி வராமல் இருக்கவும் அல்லது வந்த பின்னர் சிரமப்படாமல் இருக்கவும் இந்த கம்பு சூப் செய்து குடிங்கள்.. அப்படி செய்யும் இந்த கம்பு சூப்பில் சில காய்கறிகளையும் சேர்த்து செய்தால் மிக ருசியக இருக்கும்.. அதாவது கம்பு வெஜிடபிள் சூப் ஆகும்.. வாங்க இந்த சூப்பை செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன? அவற்றை செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
கம்பின் நன்மைகள்
சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வேதிப்பொருள்களும் வைட்டமின்களும் அளவிட கம்பில் அதிக புரத சத்துக்கள் உள்ளது. வெள்ளை அரிசிகளை விட 8 மடங்கு இரும்பு சத்து காம்பில் உள்ளது. கம்பை கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது மற்றும் தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை கொடுத்து பலத்தைக் கொடுக்கும். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமாக இருக்கிற அரிசி சத்தத்தை சாப்பிட முடியாது அவர்கள் கம்பை கூழ் களி மற்றும் தோசை செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் மற்றும் உடல் ஆரோக்கிமாகும்.

தேவையான பொருள்கள்
1. பீன்ஸ்
2. கேரட்
3. காலி ஃ பிளவர்
4. பெரிய வெங்காயம்
5. தக்காளி
6. காளான்
7. கம்பு
8. மஞ்சள் தூள்
9. ஆலிவ் எண்ணெய்
10. இஞ்சி, பூண்டு விழுது
11. கொத்துமல்லி
12. உப்பு
13. மிளகாய்த் தூள்
14. தனியா பொடி
செய்முறை
1. முதலில் வெங்காயம், காளான், தக்காளி மற்றும் இதர காய்கறிகளை சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்..
2. கம்பை இரண்டு மணி நேரம் நன்கு ஊறவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
3. பின்னர் கொத்தமல்லியை ஆய்ந்து மண் நீக்கி கழுவி தண்ணீரை வடித்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்..
4. ஒரு வாணலியில் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து சூடானவுடன் நீங்கள் நறுக்கி வைத்து இருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் படியாக வதக்கவும்.
5. பிறகு நன்கு வதங்கியவுடன் இஞ்சி - பூண்டு விழுது நறுக்கி வைத்த தக்காளி ஆகிய இவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் மீண்டும் ஒரு முறை மேற்கண்டவற்றுடன் சேர்த்து வதக்கவும்.
6. பின்னர் நன்கு வதங்கிய மாத்திரத்தில் மிளகாய்த் தூள், தனியா பொடி சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து ஊறவைத்த கம்பையும் அதனுடன் கொட்டி நன்றாகக் கிளறவும்.
7. மறுபுறம் நீங்கள் முன்பு நறுக்கி வைத்த காய்கறிகளுடன் இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்துத் தேவையான அளவு உப்பைத் தூவி மூடிவிட்டு சில நிமிடங்களுக்கு அடுப்பை குறைவான வெப்பத்தில் வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
8. பின்னர் நன்கு கொதித்த மாத்திரத்தில் இறக்கி வைத்து அதன் மேல் காளானையும், பொரித்த வெங்காய இதழ்களையும், கொத்தமல்லியையும் தூவி அருந்தலாம்.
உடல் பருமன் உள்ளவர்கள் கம்பு தானிய உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது..



Click it and Unblock the Notifications