Latest Updates
-
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
வீட்டிலேயே பன்னீர் செய்வது எப்படி?
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் தான் பன்னீர். இந்த பன்னீரை நீங்கள் கடைகளில் தான் வாங்கி சமைத்திருப்பீர்கள். ஆனால் இதை எளிதில் வீட்டிலேயே தயாரிக்கலாம்
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் தான் பன்னீர். இந்த பன்னீரை நீங்கள் கடைகளில் தான் வாங்கி சமைத்திருப்பீர்கள். ஆனால் இதை எளிதில் வீட்டிலேயே தயாரிக்கலாம். அதுவும் வெறும் இரண்டு பொருட்களைக் கொண்டே 30 நிமிடத்தில் தயாரிக்கலாம்.

உங்களுக்கு வீட்டில் எளிய முறையில் எப்படி பன்னீர் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வீட்டில் தயாரிக்கும் பன்னீர் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொழுப்புமிக்க பால் - 2 லிட்டர்
* தயிர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். இப்போது பால் திரிந்து போக ஆரம்பிக்கும். பால் நன்கு திரிந்து நீர் முழுமையாக பிரிந்த பின் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின்பு ஒரு பெரிய வடிகட்டியின் மேல் சுத்தமான வெள்ளைத் துணியை விரித்த, அதில் திரிந்த பாலை ஊற்றி வடிகட்ட வேண்டும். அப்படி வடிகட்டும் போது குளிர்ந்த நீரை ஊற்றி கையால் கிளறிவிட்டு வடிகட்டுங்கள்.
* பிறகு அந்த துணியை மூட்டை போட்டு நன்கு கட்டி, அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து வெளியேற்றி, அதன் மேல் ஒரு கனமான பொருளை 30 நிமிடம் வைத்து எடுத்தால், பன்னீர் தயார்.
குறிப்பு:
* பாலை திரிய வைப்பதற்கு தயிருக்கு பதிலாக, எலுமிச்சை சாறு அல்லது வினிகரைப் பயன்படுத்தலாம்.
* பாலை திரிய வைத்து வடிகட்டிய பின்னர், குளிர்ந்த நீரில் நன்கு கழுவ வேண்டும். இதனால் பன்னீரில் உள்ள புளிப்புத்தன்மை நீங்கும்.
* வேண்டுமானால், தயாரித்த பன்னீரை உதிர்த்துக் கொள்ளலாம் அல்லது விருப்பமான வடிவத்திலும் வெட்டிக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications