Latest Updates
-
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
ஹோலி ஸ்பெஷல்: பாங் தண்டை
பாங் தண்டை ஹோலி பண்டிகையன்று வட இந்தியாவில் ஸ்பெஷலாக செய்யப்படும் ஒரு பானம். ஹோலி என்றதும் பலரது நினைவிற்கு வருவது வண்ணமயமான கலர் பொடிகள் மட்டுமின்றி, இந்த பாங் தண்டையும் தான்.
பாங் தண்டை ஹோலி பண்டிகையன்று வட இந்தியாவில் ஸ்பெஷலாக செய்யப்படும் ஒரு பானம். ஹோலி என்றதும் பலரது நினைவிற்கு வருவது வண்ணமயமான கலர் பொடிகள் மட்டுமின்றி, இந்த பாங் தண்டையும் தான். நீங்கள் ஹோலி அன்று தயாரிக்கப்படும் பாங் தண்டையை உங்கள் வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா?

அதை எப்படி செய்வதென்று உங்களுக்கு தெரியாதா? அப்படியானால் கீழே பாங் தண்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முழு கொழுப்பு நிறைந்த பால் - 1 லிட்டர்
* குங்குமப்பூ - சிறிது
* சர்க்கரை - 3/4 கப்
பாங் தண்டை மசாலாவிற்கு...
* கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பாதாம் - 1/4 கப்
* மிளகு - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 3 (பொடித்து கொள்ளவும்)
* பாங் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாங் தண்டை செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பாதாமின் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் கசகசா, சோம்பு, தோலுரித்த பாதாம், மிளகு, ஏலக்காய் விதைகள் மற்றும் பாங் பேஸ்ட் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பால் நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பாங் தண்டை மசாலா, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அல்லது ஹேண்ட் பிளெண்டர் கொண்டு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அடுப்பை அணைத்துவிட்டு பாங்கை குளிர வைக்கவும். பாங் தண்டை ஓரளவு குளிர்ந்ததும், அதை ஃப்ரிட்ஜில் குறைந்தது 5-6 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். வேண்டுமானால், இதில் ஐஸ் கட்டிகளை சேர்த்தும் பரிமாறலாம். இப்போது சுவையான பாங் தண்டை தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications