Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது..
மூலிகை பன்னீர் கிரேவி
உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அதே வேளையில் கொத்தமல்லி, புதினா வீட்டில் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு மூலிகை பன்னீர் கிரேவி செய்யுங்கள்.
இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அதே வேளையில் கொத்தமல்லி, புதினா வீட்டில் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு மூலிகை பன்னீர் கிரேவி செய்யுங்கள். இந்த பன்னீர் கிரேவி சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு மூலிகை பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மூலிகை பன்னீர் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
* பூண்டு - 6 பல் (நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கப் (நறுக்கியது)
* புதினா - 1 கப் (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் தேவையான நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
* இறுதியாக சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளித்து கிரேவியில் ஊற்றி கிளறினால், மூலிகை பன்னீர் கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
