Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
உங்கள் நாவை ஊறச் செய்யும் மொறுமொறுப்பான பீர்க்கங்காய் பஜ்ஜி!!
பீர்க்கங்காய் பஜ்ஜி பொதுவாக தென்னிந்தியாவில் விரும்பி செய்யப்படும் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகும். இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மற்றும் செய்முறைகள் மூலம் காணலாம்.
பீர்க்கங்காய் பஜ்ஜி பொதுவாக தென்னிந்தியாவில் விரும்பி செய்யப்படும் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகும். இந்த பீர்க்கங்காய் பஜ்ஜி என்பது அதிகமான சத்துக்கள் அடங்கிய பீர்க்கங்காயை கலர்புல்லான கடலை மாவில் முக்கி எண்ணெய்யில் போட்டு மொறு மொறுவென பொரித்தெடுத்து பரிமாறும் ரெசிபி ஆகும்.
இந்த பீர்க்கங்காய் பஜ்ஜி உங்கள் மாலை நேர தேநீர் வேளையை கண்டிப்பாக சுவை மிகுந்ததாக மாற்றக் கூடியது. அதுவும் குறிப்பாக மழைக்காலத்தில் அந்த சில்லென்ற பருவ காலத்தில் ஒரு கப் தேநீருடன் இந்த பீர்க்கங்காய் பஜ்ஜி போட்டு சாப்பிட்டால் போதும் ஒரு இனிமையான விருந்து கிடைக்கும். இதன் மேல் பூசப்பட்டிருக்கும் கடலை மாவின் மொறு மொறுப்பான தன்மையும் உள்ளே பீர்க்கங்காயின் மென்மையான தன்மையும் காரசாரமான சுவையும் உங்கள் நாக்கில் எச்சு ஊற வைத்து விடும்.
பொதுவாக பஜ்ஜி என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகை ஆகும். எல்லா பண்டிகை மற்றும் பார்ட்டிகளின் போது இது முக்கிய ஸ்நாக்ஸ் ஆக இடம் பெறும். இதே மாதிரி நீங்கள் உருளைக்கிழங்கு பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜி போன்ற வெவ்வேறு வகையான பஜ்ஜிகளை அறிந்திருப்பீர்கள்.
தீடீரென்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் கூட இந்த பீர்க்கங்காய் பஜ்ஜி செய்து அசத்திடலாம். ஏனெனில் இது செய்வதற்கு மிகவும் விரைவான எளிதான ரெசிபி ஆகும். மேலும் இது குழந்தைகளுக்கும் ரெம்ப பிடித்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆகும். சரி வாங்க இப்பொழுது இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.
பீர்க்கங்காய் பஜ்ஜி வீடியோ ரெசிபி

Recipe By: காவ்யா ஸ்ரீ
Recipe Type: ஸ்நாக்ஸ்
Serves: 4 பேர்கள்
-
பீர்க்கங்காய் (பீர்க்கங்காய்) - 1/2
கடலை மாவு - 1/2 பெளல்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் +பொரிப்பதற்கு
தண்ணீர் - 1 கப்
-
1. பீர்க்கங்காயை இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இப்பொழுது ஒரு துண்டுப் பகுதியை மட்டும் எடுத்து தோலை உரிக்கவும்.
2. தோலுரித்த பீர்க்கங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
3. ஒரு பெளலில் கடலை மாவை எடுத்து கொள்ளவும்.
4. அதனுடன் மஞ்சள் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
5. அதனுடன் மேலும் மிளகாய் தூள் மற்றும் சீரகம் சேர்க்கவும்.
6. பிறகு உப்பு சேர்த்து கலவையை நன்றாக கலக்கவும்.
7. அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
8. 1-2 நிமிடங்கள் வரை எண்ணெய் நன்றாக சுடும் வரை காத்திருக்க வேண்டும்.
9. பிறகு எண்ணெய்யை கடலை மாவு கலவையில் ஊற்ற வேண்டும்.
10. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கடலை மாவு பேட்டரை சரியான பதத்தில் தயாரிக்க வேண்டும்.
11. இப்பொழுது பொரிப்பதற்கு எண்ணெய்யை கடாயில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
12. நறுக்கிய பீர்க்கங்காயை இந்த பேட்டரில் நன்றாக முக்கி எடுக்க வேண்டும்.
13. ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும்.
14. பஜ்ஜி பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.
15. இப்பொழுது பஜ்ஜியை எண்ணெய்யிலிருந்து எடுத்து நன்றாக எண்ணெய்யை வடிகட்டி விட்டு ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
16. சூடான மொறு மொறுப்பான காரசாரமான பஜ்ஜி ரெடி
- 1. கடலை மாவு பேட்டரை தோசை மாவு பதத்திற்கு தயாரித்து கொள்ளுங்கள்.
- 2. பேட்டருடன் ஓரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்தால் கூடுதல் மொறு மொறுப்பு கிடைக்கும்.
- பரிமாறும் அளவு - 2 பஜ்ஜிகள்
- கலோரிகள் - 156. 2 கலோரிகள்
- கொழுப்பு - 6.3 கிராம்
- புரோட்டீன் - 4.1 கிராம்
- கார்போஹைட்ரேட் - 22.5 கிராம்
- சுகர் - 1.1 கிராம்
- நார்ச்சத்து - 3.2 கிராம்
படிப்படியான செய்முறை விளக்கம் :பீர்க்கங்காய் பஜ்ஜி ரெசிபி செய்வது எப்படி
1. பீர்க்கங்காயை இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இப்பொழுது ஒரு துண்டுப் பகுதியை மட்டும் எடுத்து தோலை உரிக்கவும்.
2. தோலுரித்த பீர்க்கங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
3. ஒரு பெளலில் கடலை மாவை எடுத்து கொள்ளவும்.
4. அதனுடன் மஞ்சள் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
5. அதனுடன் மேலும் மிளகாய் தூள் மற்றும் சீரகம் சேர்க்கவும்.
6. பிறகு உப்பு சேர்த்து கலவையை நன்றாக கலக்கவும்.
7. அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
8. 1-2 நிமிடங்கள் வரை எண்ணெய் நன்றாக சுடும் வரை காத்திருக்க வேண்டும்.
9. பிறகு எண்ணெய்யை கடலை மாவு கலவையில் ஊற்ற வேண்டும்.
10. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கடலை மாவு பேட்டரை சரியான பதத்தில் தயாரிக்க வேண்டும்.
11. இப்பொழுது பொரிப்பதற்கு எண்ணெய்யை கடாயில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
12. நறுக்கிய பீர்க்கங்காயை இந்த பேட்டரில் நன்றாக முக்கி எடுக்க வேண்டும்.
13. ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும்.
14. பஜ்ஜி பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.
15. இப்பொழுது பஜ்ஜியை எண்ணெய்யிலிருந்து எடுத்து நன்றாக எண்ணெய்யை வடிகட்டி விட்டு ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
16. சூடான மொறு மொறுப்பான காரசாரமான பஜ்ஜி ரெடி

Click it and Unblock the Notifications