1 கப் அவலும், 1 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..

Posted By:

Banana Aval Kozhukattai Recipe In Tamil: ஈவ்னிங் நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியைப் போக்கும் வகையில் ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் இந்த ஸ்நாக்ஸ் ஆரோக்கியமானதாகவும், குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும், வயிறு நிரம்புமாறும் இருக்க வேண்டுமா? உங்கள் வீட்டில் அவலும், வாழைப்பழமும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு கொழுக்கட்டை செய்து கொடுங்கள். இந்த கொழுக்கட்டை செய்வதற்கு மிகவும் சுலபமாகவும், ருசியாகவும் இருக்கும். ஒருமுறை இந்த கொழுக்கட்டையை செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

Healthy Snacks Recipes How To Make Banana Aval Kozhukattai

உங்களுக்கு இந்த வாழைப்பழ அவல் கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ அவல் கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* அவல் - 1 கப்
* தண்ணீர் - 1 கைப்பிடி
* தேங்காய் - 1/2 மூடி (பொடியாக நறுக்கியது)
* நெய் - 1 ஸ்பூன்
* முந்திரி - 10 (பொடியாக நறுக்கியது)
* பச்சை வாழைப்பழம் - 1
* நாட்டுச்சர்க்கரை - 5 ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் அவலை எடுத்துக் கொண்டு, நீரில் ஒருமுறை கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட வேண்டும்.
* பின் அதில் ஒரு கைப்பிடி நீரை தெளித்து, மூடி வைத்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய தேங்காயை சேர்த்து லேசாக நிறம் மாற வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய முந்திரியை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஊற வைத்த அவலை எடுத்துக் கொண்டு, கைகளை அவலை உதிர்த்து விட வேண்டும். அவல் நன்கு ஊறி மென்மையானதும், அதில் பச்சை வாழைப்பழத்தை துண்டுகளாக்கி சேர்த்து லேசாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் நாட்டுச்சர்க்கரை, வறுத்த தேங்காய் மற்றும் முந்திரியை சேர்த்து, புட்டு மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அடுத்து ஒரு சிறிய வாழை இலையை எடுத்து, அதன் மேல் பிசைந்து வைத்துள்ள கலவையை சிறிது வைத்து நன்கு மடித்து, இட்லி தட்டின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து கலவையையும் வாழை இலையில் வைத்து மடித்து வைக்க வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நீரை ஊற்றி, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இந்த இட்லி தட்டை வைத்து மூடி, 5-8 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* சூடு நன்கு ஆறியதும், வாழை இலை பொட்டலத்தை எடுத்து திறந்தால், சுவையான வாழைப்பழ அவல் கொழுக்கட்டை தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion