Latest Updates
-
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்..
Siruthaniya Murungai Keerai Kanji Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் மிகவும் சிம்பிளாக 4 விதமான சிறுதானியங்களைக் கொண்டு அருமையான சுவையில் கஞ்சி செய்யுங்கள். இந்த கஞ்சி ஏராளமான சத்துக்களைக் கொண்டது. முக்கியமாக இது உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற அருமையான கஞ்சி. இந்த கஞ்சியை அடிக்கடி செய்து உட்கொண்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

உங்களுக்கு இந்த சிறுதானிய முருங்கைக்கீரை கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிறுதானிய முருங்கைக்கீரை கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்ள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைத்து பொடி செய்வதற்கு...
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
கஞ்சி செய்வதற்கு...
* குதிரைவாலி - 1/4 கப்
* சாமை - 1/4 கப்
* திணை - 1/4 கப்
* வரகரிசி - 1/4 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 4 கப்
* சின்ன வெங்காயம் - 15 (தட்டியது)
* பூண்டு - 12 பல் (தட்டியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* அரைத்த மசாலா பொடி
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடுநீர் - 3 கப்
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், வரமிளகாய், சோம்பு
ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் குதிரைவாலி, சாமை, திணை, வரகரிசி
ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நீரில் 3-4 முறை நன்கு கழுவிக் கொண்டு,
நீரை ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 4 கப் நீரை ஊற்றி நன்கு
கொதிக்க ஆரம்பித்ததும், ஊற வைத்த சிறுதானியங்களை நீரை வடிகட்டிவிட்டு
சேர்த்து, அத்துடன் பாசிப்பருப்பையும் கழுவி சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் தட்டி வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு, நறுக்கிய
தக்காளி, மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள பொடி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கலந்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து அதில் 3 கப் சுடுநீரை ஊற்றி
கலந்து, மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், அதில் முருங்கைக்கீரையை சேர்த்து கிளறி 7-10 நிமிடம்
நன்கு வேக வைத்து இறக்கினால், சிறுதானிய முருங்கைக்கீரை கஞ்சி
தயார்.



Click it and Unblock the Notifications
