Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
ஒருடைம் இந்த பக்குவத்துல சுண்டக்காய் குழம்பு செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
Green Sundakkai Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் யாரும் சுண்டக்காயை சாப்பிடமாட்டார்களா? அவர்களை சுண்டக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் அவர்களுக்கு இந்த பக்குவத்துல சுண்டக்காய் குழம்பு செய்யுங்கள். இந்த சுண்டக்காய் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்.
சுண்டக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. சுண்டக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும். மேலும் இது உடலில் இரத்தத்தை அதிகரிக்கும்.

உங்களுக்கு சுண்டக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுண்டக்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை சுண்டக்காய் - 100 கிராம்
* தேங்காய் - 1/4 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சுண்டக்காயை லேசாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை நீரில் போட்டு 2 முறை பிசைந்துவிட்டு கழுவி, தனியே ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேப் போல் மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சுண்டக்காயை சேர்த்து நன்கு 4-5 நிமிடம்
வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த வாணலியில் உள்ள எண்ணெயை வடிகட்டியால் வடிகட்டி எடுத்துக்
கொண்டு, அதே எண்ணெயை மற்றொரு வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து,
எண்ணெய் சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் குழம்பு மிளகாய் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள்,
மஞ்சள் தூள் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, 1 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
புளி நீரை ஊற்றி 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க
வேண்டும்.
* நன்கு கொதித்ததும், அதில் சுண்டக்காய் மற்றும் அரைத்த தேங்காயை
சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, எண்ணெய் மேலே மிதக்கும்
வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பச்சை சுண்டக்காய் குழம்பு
தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications