Latest Updates
-
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
பச்சை பயறு தால்
இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்வதாக திட்டமிட்டிருந்தால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தால், பச்சை பயறு கொண்டு தால் செய்யுங்கள்.
பச்சை பயறு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பச்சை பயறை கொண்டு குழம்பு, தால் என்று செய்து சாப்பிடலாம். இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்வதாக திட்டமிட்டிருந்தால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தால், பச்சை பயறு கொண்டு தால் செய்யுங்கள். இந்த தால் சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் சூப்பராக இருக்கும்.

உங்களுக்கு பச்சை பயறு தால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1/2 கப்
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 1/2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* மிளகு - 1/2 டீஸ்பூன்
மசாலா பொடிகள்...
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பச்சை பயறை ஒரு கடாயில் போட்டு குறைவான தீயில் குறைந்தது 3-5 நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைத்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, கழுவி வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நீரை ஊற்றி குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 6 விசில் விட்டு இறக்கிக் கொள்ளுஙகள்.
* விசில் போனதும் குக்கரை திறந்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மத்து கொண்டு நன்கு மசித்து விட வேண்டும். பின் கடைந்த பச்சை பயறை மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், பச்சை பயறு தால் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
