Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
பச்சை பயிறை வைச்சு இந்த கோழிக்கோடு குருமாவை செஞ்சு பாருங்க... தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்...!
Green Gram Kurma Recipe in Tamil: பாசிப்பயறு ஒரு சிலருக்கு பிடிக்காத ஒன்றாக இருக்கும். ஆனால் இதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இதை தவிர்க்க முடியாது. உடல் எடை குறைக்க விரும்புவோர் அல்லது ஜிம்-க்கு செல்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவு.
இதை வைத்து எப்போதும் போல் பயறு கடையில் செய்தோ அல்லது தளித்தோ செய்யாமல் இப்படி கோழிக்கோடு குருமா செய்து பாருங்கள். தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த சூப்பரான பாசிப்பயிறு குருமாவை எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- பாசிப்பயிறு - 1 கப்
- உருளைக்கிழங்கு - 4
- பச்சை மிளகாய் - 3
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
அரைக்க:
- பூண்டு - 4 பல்
- சின்ன வெங்காயம் - 5
- தேங்காய் - 1 மூடி
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- வரமிளகாய் - 2
- கருவேப்பிலை - சிறிதளவு
- சின்ன வெங்காயம் - 12 அல்லது 15
- பெருங்காயம் - ¼ டீ ஸ்பூன்
செய்முறை:
- குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் பாசிப்பயறை சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவும்.
- பின் அதில் மூன்றரை பங்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- பாசிபயறை ஊற வைத்து செய்தால் குறைந்தது 2 மணி நேரம் ஊற வைத்து 2
விசில் வரும் வரை வேக விடவும்.
- உருளைக்கிழங்கை மண் இல்லாமல் கழுவி வேக வைத்து ஆறவிடவும்.
- பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக கீறி வைக்கவும்.
- பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சுத்தமாக கழுவி வைத்து கொள்ளவும்.
- சின்ன வெங்காயம் ஐந்தை தவிர மீதம் இருப்பவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- தேங்காயை உங்கள் விருப்படி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தனியே வைத்த ஐந்து சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், தோல் உரித்து வைத்த பூண்டு மற்றும் சீரகம் சேர்க்கவும்.
- அதை முதலில் தண்ணீர் சேர்க்காமல் ஒரு முறை அரைத்து விட்டு பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- வேக வைத்த பாசி பயறை நன்றாக மசித்து விட்டு மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
- அதில் தோல் உரித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
- பின் அரைத்து வைத்த தேங்காய் கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- அதனுடன் மஞ்சள் தூள், கருவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பின் வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- கடைசியாக பெருங்காயம் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
- இந்த தாளிப்பை பாசிப்பருப்புடன் சேர்த்து கிளறி கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான பாசிப்பருப்பு குருமா ரெடி!



Click it and Unblock the Notifications
