Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
பச்சை பயிறை வைச்சு சப்பாத்திக்கு இப்படி ஒரு கிரேவி செய்யுங்க... மட்டன் குருமாவை விட சூப்பரா இருக்கும்...!
Green Gram Gravy Recipe in Tamil: இட்லி, தோசைக்கு சைடிஷ் செய்வது போல எளிதானதல்ல சப்பாத்தி, பூரிக்கு சைடிஷ் செய்வது. ஏனெனில் இட்லி, தோசைக்கு எண்ணற்ற சட்னிகளும், சாம்பார் வகைகளும் சைடிஷாக உள்ளது. ஆனால் சப்பாத்தி, பூரிக்கு குருமாவை விட்டால் வேறு சாய்ஸ் இல்லை. அதிலும் பெரும்பாலும் உருளைக்கிழங்கு அல்லது பட்டாணி குருமாதான் அனைவருக்கும் தெரிந்த ஒரே விருப்பமாகி இருக்கும்.
இந்த நிலையில் பச்சை பயிரை வைத்து சப்பாத்தி மற்றும் பூரிக்கு ஒரு அட்டகசமான கிரேவி செய்யலாம். இது சுவையானது என்பதையும் தாண்டி மிகவும் ஆரோக்கியமானதும் கூட. எடையைக் குறைக்க விரும்புபவர்களின் முதல் விருப்பமாக இருப்பது சப்பாத்தி, முக்கிய விருப்பமாக இருப்பது பயிறு வகைகள். இந்த இரண்டையும் சேர்த்து ஒரே நேரத்தில் செய்வது பல நன்மைகளை அளிக்கும். இந்த பதிவில் பச்சை பயிறை வைத்து எப்படி சப்பாத்திக்கு சைடிஷ் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- பச்சை பயறு - 1/2 கப்
- தக்காளி - 1
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மல்லித் தூள் - 1 ஸ்பூன்
- சீரகத்தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
அரைக்க:
- தேங்காய் துருவல் - 1/4 கப்
- முந்திரிப்பருப்பு - 5
தாளிக்க:
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
செய்முறை:
- பச்சை பயறை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
- 3 விசில் வந்த் பச்சை பயிறு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- அதேசமயத்தில் வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி தழையை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி குலையும் அளவிற்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
- பின்னர் வேக வைத்துள்ள பச்சை பயறு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறுதியில் கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்தால் சுவையான பச்சை பயறு கிரேவி ரெடி.
- இந்த கிரேவி சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
