Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
இட்லி, தோசைக்கு 1/2 கப் பாசிப் பயறு வெச்சு.. இப்படி சட்னி செய்யுங்க... அருமையா இருக்கும்..
Pasi Payaru Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் பெரும்பாலும் காலையில் இட்லி, தோசை தான் செய்வீர்களா? இதற்கு சைடு டிஷ்ஷை முடிவு செய்வது என்பதே தினமும் ஒரு பெரிய வேலையாக உள்ளதா? அதுவும் ஒரே மாதிரி சைடு டிஷ்ஷை செய்து போரடித்துவிட்டதா? பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னியை தான் பெரும்பாலான வீடுகளில் செய்வோம்.
உங்களுக்கு ஒரே சட்னியை செய்து அலுத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பயறு உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை பயறு கொண்டு சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு பச்சை பயறு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பாசிப் பயறு - 1/2 கப்
* வரமிளகாய் - 6
* பூண்டு - 4
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தேங்காய் - 1 கையளவு (துண்டுகளாக்கப்பட்டது)
* புளி - ஒரு சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பாசிப்பயறை சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், பூண்டு பற்கள் மற்றும் வெங்காயத்தை சேர்த்து
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் துண்டுகளாக்கப்பட்ட தேங்காயை ஒரு கையளவு சேர்த்து,
அத்துடன் சிறு துண்டு புளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பச்சை பயறு சட்னி
தயார்.
Image Courtesy: My Cooking Journey



Click it and Unblock the Notifications
