Latest Updates
-
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
1 கப் கோதுமை ரவை இருந்தா போதும்.. அருமையான ருசியில் பஞ்சு போல இட்லி சுடலாம்...
Godhumai Rava Idli Recipe In Tamil: காலையில் எழுந்ததும் என்ன சமைப்பது என்று தெரியலையா? இட்லி சுடலாம் என்றால் இட்லி மாவு இல்லையா? அப்படியானால் கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் கோதுமை ரவை உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை ரவையைக் கொண்டு இட்லி சுடுங்கள்.
இந்த இட்லி செய்வதற்கு சுபலமாக இருப்பதோடு, தேங்காய் சட்னியுடன் சாபிட அட்டகாசமாகவும் இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கோதுமை ரவை இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவை இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை ரவை - 1 கப்
* தயிர் - 3/4 கப்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1-2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
* கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* சோடா உப்பு - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் தயிரை நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும்
பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் கோதுமை ரவையை சேர்த்து மிதமான தீயில் வைத்து,
பொன்னிறமாக நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு வறுத்த கோதுமை ரவையை தயிருடன் சேர்த்து, சிறிது உப்பு தூவி
நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* ஒருவேளை கலவையானது மிகவும் கெட்டியாக இருந்தால், இட்லி மாவு
பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் கேரட், கொத்தமல்லியைத் தூவி, ஒரு சிட்டிகை சோடா
உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் இட்லி தட்டை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, தயாரித்து
வைத்துள்ள இட்லி கலவையை இட்லிகளாக ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து,
10-12 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
* இப்போது சுவையான கோதுமை ரவை இட்லி தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications