Latest Updates
-
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க..
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரையுங்க... டெஸ்ட் சும்மா தாறுமாறா இருக்கும்...!
Ginger Tomato Chutney Recipe in Tamil: தென்னிந்தியாவின் ஆகச்சிறந்த காலை மற்றும் இரவு நேர டிபன் என்றால் அது இட்லி மற்றும் தோசைதான். தினமும் ஒரே உணவுகளை எடுத்துக் கொண்டாலும் அதை விதவிதமான சைடிஷுடன் வைத்து சாப்பிடும்போதுதான் அது போரடிக்காமல் இருக்கும். அதற்கு இட்லி, தோசையும் விதிவிலக்கல்ல.
வானத்தில் உள்ள நட்சத்திரங்களை கூட எண்ணி விடலாம் ஆனால் இட்லி, தோசையின் சைடிஸ்களை எண்ண முடியாது. இட்லிக்கு பொதுவாக அனைத்து வீடுகளிலும் செய்யப்படும் சைடிஷ் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி மற்றும் சாம்பார் போன்றவைதான். ஆனால் நாளடைவில் இது போரடித்து விடும். எனவே வித்தியாசமான சட்னி வகைகளை தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியம்.

சுவையுடன் ஆரோக்கியமான சட்னியை அரைக்கும் போது அதனால் இரட்டைப் பலன்கள் கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஆரோக்கியமான மற்றும் சுவையான சட்னிதான் இஞ்சி தக்காளி சட்னி. காரசாரமான இந்த சட்னி செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட உங்கள் குடும்பத்தினர் அதிகமாக சாப்பிடுவார்கள் என்பது மட்டும் உறுதி. இந்த சுவையான சட்னியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- தக்காளி - 2
- வெங்காயம் - 1 பெரிய வெங்காயம் அல்லது 10 சின்ன வெங்காயம்
- இஞ்சி - 3 - 4 துண்டுகள்
- மிளகாய் தூள் - ஒன்றரை ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிளவு
தாளிக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - அரை ஸ்பூன்
- உளுந்தம்பருப்பு - அரை ஸ்பூன்
- கடுகு - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- தக்காளி மற்றும் வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். பின்னர் அதை குளிர வைக்கவும்.
- நன்கு ஆறியவுடன் ஒரு மிக்ஸியில், தக்காளி, வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி இலை, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
- இந்த சட்னியை பேஸ்ட் போல அரைக்க வேண்டிய அவசியமில்லை. சிறிதும், பெரிதுமாக வெங்காயம் தட்டுப்படுவது அதன் சுவையை மேலும் அதிகரிக்கும்.
- சட்னி அரைத்ததும் அதை பாத்திரத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் தாளிக்க தேவையான பொருட்களை போட்டு தாளித்து சட்னி மீது ஊற்றவும்.
- சூப்பரான இஞ்சி தக்காளி சட்னி ரெடி. இது இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
