Latest Updates
-
November 2026 Tarot Predictions: உங்க பிறந்த தேதிப்படி நவம்பர் மாதம் எப்படி இருக்கும் தெரியுமா? -
ரோட்டுக்கடை சிக்கன் 65 மட்டும் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஊறுகாய் மற்றும் கருவாட்டை அதிகம் சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? விளக்கும் டாக்டர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 100 நாட்களில் இந்த 5 ராசிக்காரங்க அசுர வளர்ச்சியை காண்பார்களாம்! -
எப்பவும் சிக்கனை ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
நவம்பர் 01, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - இல்லனா ஆபத்துதான் -
செவ்வாய் சிம்ம ராசிக்குள் செல்வதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கிலோ சிக்கன் வாங்குனா இந்த மாதிரி மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்கா செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
வாஸ்து படி உங்கள் வீட்டில் உள்ள சின்ன சின்ன தவறுகள் உங்களுக்கு ராகுவின் சாபத்தை பெற்றுத்தருமாம் - ஜாக்கிரதை -
இந்தியாவின் இந்த கிராமத்தில் திருமணம் என்ற உறவே கிடையாதாம் - லிவ்-இன் உறவு மட்டும்தானாம்- எங்க தெரியுமா?
கேரட் இஞ்சி சூப் ரெசிபி... இந்த ஈஸியான சூப் உங்க நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்குமாம்...!
Carrot Ginger Soup Recipe in Tamil: காலநிலை மாற்றத்தால் இப்போது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழையும், பனியும் பொழிகிறது. எனவே பலரும் பருவகால நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டிய அவசியம்.
கேரட் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பதை நாம் அறிவோம். பெரும்பாலான வீடுகளில் கேரட்டை பொரியலாகத்தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் கேரட்டை எண்ணெயில் சமைக்கும் போது அதிலிருந்து சில ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். எனவே கேரட்டை வேகவைத்து அதில் உணவுகளை சமைக்கும் போது அதிலிருந்து அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறலாம்.
ஆரோக்கியமானது சுவையாக இருக்காது என்ற பொதுவான கருத்தை நொறுக்கும் சில உணவுகள் உள்ளது. அந்த வகையில் கேரட் இஞ்சி சூப் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது மட்டுமல்ல, சுவையாகவும் இருக்கும். கேரட் மற்றும் இஞ்சி இரண்டும் மிகவும் வித்தியாசமான சுவை கொண்ட பொருட்கள், ஆனால் ஒன்றாக சமைக்கும்போது, அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு, உங்கள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தையும் அளிக்கும்.

இந்த சூப்பின் செய்முறையை சமைக்க எளிதானது மற்றும் இதை செய்வதற்கு சில அடிப்படை சமையலறை பொருட்கள் மட்டுமே தேவை. பனிபொழியும் இந்த காலகட்டத்தில் சூடாக, சுவையாக மற்றும் ஆரோக்கியமாக ஏதாவது குடிக்க விரும்பினால் அதற்கு இந்த சூப் சரியான தேர்வாக இருக்கும். இந்த ஆரோக்கியமான சூப்பை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 2 கப் கேரட்
- 2 கப் காய்கறி வேகவைத்த தண்ணீர்
- 1/2 கப் தேங்காய் பால்
- உப்பு தேவைக்கேற்ப
- கொத்தமல்லி இலைகள் - 1 கைப்பிடி
- 1 தேக்கரண்டி இஞ்சி
- 3 கப் தண்ணீர்
- 1 நறுக்கிய வெங்காயம்
- 1 ஸ்பூன் கருப்பு மிளகு
செய்முறை:
- கேரட்டை பெரிய துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைக்கவும். அவை மென்மையாக மாறியதும், தண்ணீரை வடிகட்டி, மீண்டும் பாத்திரத்தில் வைக்கவும்.
- அதே பாத்திரத்தில், காய்கறி வேகவைத்த தண்ணீரில் நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, தேங்காய் பால், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இந்த கலவையை மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்கள் சமைக்கவும். சூப் நன்கு கொதித்ததும், தீயைக் குறைத்து, மூடி வைத்து, 30 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- சூப் நன்கு கொதித்ததும், அதை முழுவதுமாக ஆற வைத்து, அதில் வேகவைத்த கேரட் துண்டுகளை சேர்த்து அரைக்கவும்.
- பரிமாறுவதற்கு முன் சூடாக்கி, சிறிது கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.



Click it and Unblock the Notifications
