சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும்

Posted By:

Ganesh Chaturthi Special Chocolate Kozhukattai Recipe in Tamil: இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது கொழுக்கட்டைதான். பொதுவாக விநாயகர் சதுர்த்திக்கு இனிப்புக் கொழுக்கட்டை மற்றும் காரக் கொழுக்கட்டைதான் செய்வோம். ஆனால் இந்த வருடம் கொஞ்சம் வித்தியாசமான கொழுக்கட்டையை செய்ய விரும்புகிறீர்களா?

Ganesh Chaturthi Special Chocolate Kozhukattai Recipe How to Make at Home in Tamil

அப்படியென்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் கொழுக்கட்டையை செய்யுங்கள். சாக்லேட்டை வைத்து கொழுக்கட்டை செய்வது கேட்பதற்கு மிகவும் வினோதமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் சாக்லேட்டை வைத்து அனைவருக்கும் பிடிக்கும்படி சுவையான கொழுக்கட்டையை செய்யலாம்.

உங்களுக்கு விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சாக்லேட் கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- முக்கால் கப் அரிசி மாவு
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் நெய்

பூரணம் செய்ய:

- ¼ கப் சாக்லேட் சிப்ஸ்
- ¼ கப் துருவிய தேங்காய்
- 10 பாதாம் பருப்புகள் (பொடியாக நறுக்கியது)
- 2 ஸ்பூன் அரைத்த சர்க்கரை
- 1 ஸ்பூன் நெய்

செய்முறை:

- வெளிப்புற மாவைத் தயாரிக்க, நெய்யுடன் சேர்த்துத் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் உப்பைச் சேர்த்து, அதில் கொதிக்கும் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஒரு கரண்டியால் தொடர்ந்து கலக்கவும்.

- இதை 2 நிமிடங்கள் ஆறவிடவும். இப்போது இது மிதமான சூட்டில் இருக்கும். இதை நன்றாகப் பிசைந்து மென்மையான மாவாகத் தயார் செய்யவும். மாவு காய்ந்துவிடாமல் இருக்க, அதை மூடி வைக்கவும்.

- பூரணம் செய்வதற்கு, ஒரு கிண்ணத்தில் சாக்லேட் சிப்ஸ்களை ஒரு கிண்ணத்தில் போட்டு அடுப்பில் வைத்து உருக்கவும்.

- அதன்பின் உருகிய சாக்லேட்டுடன் தேங்காய், நறுக்கிய பாதாம், சர்க்கரை மற்றும் நெய் அல்லது வெண்ணெய் சேர்க்கவும்.

- மாவு கலவையிலிருந்து சம அளவுள்ள உருண்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள். கையில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு, ஒரு உருண்டையை எடுத்து உள்ளங்கையால் தட்டையாகத் தட்டுங்கள்.

- அதன் நடுவில் ஒரு ஸ்பூன் அளவு பூரணத்தை வையுங்கள். பின்னர் அதை மடித்து, நடுப்பகுதியை நன்றாக மூடி ஒட்டிவிடுங்கள். மீதமுள்ள மாவைக் கொண்டும் இதே முறையைத் தொடருங்கள்.

- கொழுக்கட்டையை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும்.

- அதன்பின் அடுப்பை அணைத்து கொழுக்கட்டையை சூடாக பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Sunday, September 13, 2026, 14:24 [IST]
Desktop Bottom Promotion