Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்யும் போது இந்த 2 பொருளை சேர்த்து செய்யுங்க... டேஸ்ட் சூப்பரா இருக்கும்!
Ganesh Chaturthi 2025 Special Recipes in Tamil: விநாயகர் சதுர்த்தி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது கொழுக்கட்டைதான். பிள்ளையாருக்கு மிகவும் பிடித்த உணவுகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது கொழுக்கட்டைதான். இது பிள்ளையாருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்ததாகும். கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபடும் போது நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது பல நூற்றாண்டுகளாக இருக்கும் நம்பிக்கை.
பொதுவாக கொழுக்கட்டை அரிசி மாவில் வெல்லம், தேங்காய், கடலைப்பருப்பு மற்றும் ஏலக்காய் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. அதேசமயம் அரிசி மாவில் தேங்காய், பச்சை மிளகாய், கடுகு சேர்த்து தாளித்து கார கொழுகட்டையும் தயாரிக்கப்படுகிறது. ஆனால் வழக்கமான அரிசி மாவுக்கு பதில் ராகி மாவில் கொழுக்கட்டை செய்யும் போது அது சுவையானதாக இருப்பதுடன் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்த பதிவில் விநாயகர் சதுர்த்திக்கு ராகி மாவை வைத்து எப்படி ஆரோக்கியமான கொழுக்கட்டையை செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- வெல்லம் - 1 கப்
- தண்ணீர் - 1/4 கப்
- ராகி மாவு - 1 கப்
- பொடித்த அவல் - 1/2 கப்
- துருவிய தேங்காய் - 1 கப்
- பொடித்த வேர்க்கடலை - 1/2 கப்
- நெய் - 2 ஸ்பூன்
- ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
செய்முறை:
- ஒரு அகன்ற பாத்திரத்தில் முதலில் ஒரு கப் அளவு பொடித்த வெல்லத்துடன் கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை நன்கு கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதித்து வந்ததும் இறக்கி விடவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் அளவு ராகி மாவை நன்றாக வறுத்து கொள்ளவும்.
- ராகி வாசனை வரும் வரை வறுத்து, அரை கப் பொடித்த அவல் சேர்த்து நன்கு கிளறவும்.
- பின்னர் அதில் ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பின்னர் அரை கப் பொடித்த வேர்க்கடலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின்னர் அடுப்பை அணைத்து விட்டு அதில் தனியாக எடுத்து வைத்துள்ள வெல்ல பாகை வடிகட்டி சேர்க்கவும்.
- 2 ஸ்பூன் நெய் மற்றும் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
- மாவை கொழுக்கட்டை அச்சில் பிடித்த வடிவத்தில் பிடித்து வைக்கவும்.
- இட்லி பாத்திரத்தில் நெய் தடவி, பிடித்த கொழுக்கட்டையை 15 நிமிடம் வேக வைக்கவும் .
- சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications
