Just In
- 1 hr ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- 2 hrs ago சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- 3 hrs ago அனுமன் ஜெயந்தியன்று உருவாகும் அரிய யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..
- 3 hrs ago சித்ரா பெளர்ணமியில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்... செல்வம் சேரும்..!
Don't Miss
- News விஜயகாந்த்தை "வட்டமிட்ட" பாஜக.. அவசர அவசரமா மோடி அப்படி சொன்னாரே, இப்ப என்னாச்சு? குழம்பும் தேமுதிக
- Movies பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆரோக்கியமான ப்ரூட் சாட் ரெசிபி செய்வது எப்படி எனத் தெரியுமா?
ப்ரூட் சாட் மிகவும் புகழ் பெற்ற பஞ்சாப் மற்றும் டெல்லியின் தெருவோர கடைகளில் கிடைக்கும் முக்கியமான உணவாகும்.இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம
ப்ரூட் சாட் மிகவும் புகழ் பெற்ற பஞ்சாப் மற்றும் டெல்லியின் தெருவோர கடைகளில் கிடைக்கும் முக்கியமான உணவாகும். இந்த ப்ரூட் சாட் ரெசிபி உங்களுக்கு விருப்பமான எந்த வகையான பழங்களையும் பயன்படுத்தி அப்படியே லெமன் ஜூஸ் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் காரசாரமான சாட் மசாலா சேர்த்து செய்யப்படும் ரெசிபி ஆகும். இந்த ரெசிபிக்கு ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா, கிவி, பேரிக்காய் மற்றும் மாதுளை பழம் போன்றவற்றை சேர்க்கலாம்.
இந்த ரெசிபியில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் இது குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் மிகவும் நல்லது. தினமும் ப்ரூட் சாலட் சாப்பிட்டு வெறுப்புடன் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த ரெசிபி வேறு ஒரு சுவையான உணவாக அமையும்.
இந்த ப்ரூட் சாட் ரெசிபியை மிகவும் விரைவாகவும் சுலபமாகவும் செய்திடலாம். எனவே ஆரோக்கியமான ரெசிபிக்கு சமையலறையிலயே கிடக்காமல் எளிதாக முடித்து விருப்பத்துடன் இந்த உணவை சாப்பிடலாம். இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.
ப்ரூட் சாட் வீடியோ ரெசிபி
Recipe By: செளமியா சேகர்
Recipe Type: ஸ்நாக்ஸ்
Serves: 4 பேர்கள்
-
வாழைப்பழம் - 2
ஆப்பிள் - 1
கொய்யா - 1
மாதுளை பழம் - 1/2
கிவி - 1
பேரிக்காய் - 1
லெமன் ஜூஸ் - 4 டேபிள் ஸ்பூன்
இந்துப்பு - தேவைக்கேற்ப
சாட் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
-
1. முதலில் வாழைப்பழத்தை தோலுரித்து வட்ட வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.
2. ஆப்பிளை பாதியாக வெட்டி விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
3. மாதுளை பழத்தை பாதியாக வெட்டி அதில் உள்ள விதைகளை ஒரு கப்பில் எடுத்து கொள்ளவும்.
4. கிவி பழத்தின் தோலை சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
5. பேரிக்காயின் மேல் கீழ் பகுதிகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
6. மேலே நறுக்கிய எல்லா பழங்களையும் நன்றாக கலக்க ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்.
7. அதனுடன் சிறிது லெமன் ஜூஸ் சேர்க்கவும்.
8. பிறகு அதனுடன் இந்துப்புவை சேர்க்கவும்.
9. அதனுடன் சாட் மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும்.
10. நன்றாக கிளறி அப்படியே பரிமாறவும்.
11. சுவையான உப்பு காரத்துடன் கூடிய ஆரோக்கியமான ப்ரூட் சாட் ரெசிபி ரெடி.
- 1. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த பழவகைகளையும் பயன்படுத்தலாம்.
- 2. இன்னும் காரசாரமான சுவை தேவைப்பட்டால் அதனுடன் மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கொள்ளலாம்.
- 3. இதன் சுவையை இன்னும் கூட்ட விரும்பினால் சீரகப் பொடி சேர்த்து கொள்ளவும்.
- 4. விரத நிகழ்ச்சிகள் இல்லாத சமயங்களில் இந்துப்புக்கு பதிலாக சாதாரண உப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
- பரிமாறும் அளவு - 1 பெளல்
- கலோரிகள் - 120 கலோரிகள்
- கொழுப்பு - 0.7 கிராம்
- புரோட்டீன் - 1.6 கிராம்
- கார்போஹைட்ரேட் - 24.1 கிராம்
- நார்ச்சத்து - 2.7 கிராம்
படிப்படியான செய்முறை விளக்கம் : ப்ரூட் சாட் ரெசிபி செய்வது எப்படி
1. முதலில் வாழைப்பழத்தை தோலுரித்து வட்ட வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.
2. ஆப்பிளை பாதியாக வெட்டி விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
3. மாதுளை பழத்தை பாதியாக வெட்டி அதில் உள்ள விதைகளை ஒரு கப்பில் எடுத்து கொள்ளவும்.
4. கிவி பழத்தின் தோலை சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
5. பேரிக்காயின் மேல் கீழ் பகுதிகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
6. மேலே நறுக்கிய எல்லா பழங்களையும் நன்றாக கலக்க ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்.
7. அதனுடன் சிறிது லெமன் ஜூஸ் சேர்க்கவும்.
8. பிறகு அதனுடன் இந்துப்புவை சேர்க்கவும்.
9. அதனுடன் சாட் மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும்.
10. நன்றாக கிளறி அப்படியே பரிமாறவும்.
11. சுவையான உப்பு காரத்துடன் கூடிய ஆரோக்கியமான ப்ரூட் சாட் ரெசிபி ரெடி.