Latest Updates
-
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்
மீன் வாங்குனா ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க..
Fried Fish Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி மீன் சமைத்து சாப்பிடுவீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் மீனை சமைத்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை மீனை ப்ரை செய்து மசாலா செய்து சாப்பிடுங்கள்.
இப்படி மசாலா செய்யும் போது, அதை சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். முக்கியமாக ஒருமுறை இப்படி வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க சொல்வார்கள்.

உங்களுக்கு ப்ரைடு பிஷ் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ரைடு பிஷ் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* மீன் - 1/2 கிலோ
* மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* தக்காளி - 2
* பச்சை மிளகாய் - 6
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - பாதி கைப்பிடி
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கெட்டியான தேங்காய் பால் - 1 1/2 கப்
செய்முறை:
* முதலில் மீனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு கழுவிய மீனில் மிளகுத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு
பேஸ்ட், 1 டீஸ்பூன் எண்ணெய், சுவைக்கேற்ப உப்பு மற்றும் எலுமிச்சை
சாற்றினை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,
மிளகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து,
முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து அதே தவாவில் உள்ள எண்ணெயில் அரைத்து வைத்துள்ள வெங்காய
விழுதை சேர்த்து நன்கு 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட
வேண்டும்.
* பின்பு அதில் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி, தீயை குறைத்து
மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, ப்ரை செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து
மூடி வைத்து 1 நிமிடம் வேக வைத்து, பின் மூடியைத் திறந்து, மீனை
திருப்பிப் போட்டு, அடுப்பை அணைத்தால், சுவையான ப்ரைடு பிஷ் மசாலா
தயார்.



Click it and Unblock the Notifications
