Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
பல முன்னணி நடிகைகள் பயன்படுத்தும் ஆளி விதை பொடி ரெசிபி... எப்படி செய்யணும் தெரியுமா?
Flax Seed Powder Recipe: ஆளி விதைகள் உடலுக்கு நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் இருக்கும் ஒமேகா 3 ஆசிட் உடலில் பல நன்மைகளை தர வல்லது. இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடல் எடையை குறைத்து கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க பெரிதும் உதவுகிறது. இது முடி கொட்டுவதை குறைத்து அடர்த்தியாக வளரவும் செய்கிறது. ஆனால் அவற்றை எப்படி சாப்பிடுவது எவ்வளவு சாப்பிடுவது என்பது பலருக்கு தெரியாத ஒன்றாக இருக்கும்.
தினசரி ஒருவருக்கு 15 முதல் 20 கிராம் ஆளி விதை போதுமானதாக இருக்கும். சிலர் ஆரோக்கியம் என்றதும் சாப்பிட்டு விடுவார்கள். சிலர் கண்ணை மூடி கொண்டு கஷ்டப்பட்டு விழுங்குவார்கள். சிலர் ஆரோக்கியமாவது மண்ணாவது என ஒதுக்கி விடுவார்கள். அதற்கு காரணம் அதன் சுவை தான். அதை சுவையாக மாற்றி அதன் பலன்களை முழுவதும் பெற இப்படி ஆளி விதை பொடி செய்து சாப்பிட்டு பாருங்கள். பிரபல நடிகை கூட இதை பற்றி பகிர்ந்துள்ளார்.

தேவையான பொருட்கள்:
- ஆளி விதை / பிளாக்ஸ் ஸீட் - 1 கப்
- வெள்ளை எள் - ¼ கப்
- வரமிளகாய் - 5
- காஷ்மீர் மிளகாய் - 5
- பூண்டு - 10 பல்
- கருவேப்பிலை - 2 கைப்பிடி அளவு
- சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் - ½ மூடி (சிறியது)
- பெருங்காயம் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- பூண்டை தோல் உரித்து நன்றாக தட்டி வைத்து கொள்ளவும்.
- தேங்காயை துருவியோ அல்லது சிறுசிறு துண்டுகளாக நறுக்கியோ எடுத்து
கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் ஆளி விதைகளை சேர்க்கவும்.
- ஆளி விதை சூடாகி வெடிக்க துவங்கும் போது மிதமான தீயில் நிறம் மாறும்
வரை வறுத்து ஆற விடவும்.
- பின் அதே வாணலியில் வெள்ளை எள்ளை சேர்த்து நன்றாக வறுத்து
ஆறவிடவும்.
- பின் சிறிதளவு எண்ணையை அதே வாணலியில் சேர்த்து சூடாக விடவும்.
- அதில் தட்டி வைத்த பூண்டை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து ஆற
விடவும்.
- அதே பாத்திரத்தில் தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெய் சேர்த்து
கொள்ளவும்.
- பின் துருவியோ அல்லது நறுக்கியோ வைத்த தேங்காய் துண்டுகளை சேர்த்து
பொன்னிறமாகவும் வரை வறுத்து ஆற விடவும்.
- தேவைப்பட்டால் மீண்டும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் வரமிளகாய்,
காஸ்மீர் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் அதனுடன் கருவேப்பிலை இலைகளை சேர்த்து ஈரப்பதம் இல்லாமல்
நொறுங்கும் பதத்திற்கு வறுக்கவும்.
- அதனுடன் சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்த்து கிளறி ஆறவிடவும்.
- வறுத்து ஆற வைத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேவையான
அளவு கல் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்தால் சுவையான ஆளி விதை
பொடி ரெடி!
இந்த பொடியை ஈரமில்லாத ஏர் டைட் கண்ணாடி பாத்திரத்தில் சேர்த்து
பிரிட்ஜில் வைத்து தினசரி பயன்படுத்தி கொள்ளலாம்.
இதை சாதம், இட்லி, மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பு: தேங்காய் சேர்த்து இருப்பதால் முடிந்தவரை சீக்கிரம் உபயோகிக்கவும். நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த தேங்காயை தவிர்த்து மற்றவை பொருட்களை சேர்த்து கொள்ளவும்.



Click it and Unblock the Notifications











