Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
வெந்தயக்கீரை கொண்டு ஒருமுறை இப்படி சாம்பார் செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்.. சத்தானதும் கூட...
Vendhya Keerai Sambar Recipe In Tamil: தற்போது வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை சமைத்து சாப்பிட்டால் தான், உடல் சூட்டை தணிக்க முடியும். உடல் சூட்டைக் குறைக்க வேண்டுமானால், கீரைகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
அதுவும் வெந்தய கீரையை உணவில் சேர்த்து வந்தால், உடலும் குளிர்ச்சி அடையும், உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும். அதற்கு வெந்தயக்கீரையை பொரியல் செய்வதற்கு பதிலாக, சாம்பார் செய்யுங்கள். இதனால் சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம், சுவையும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு வெந்தய கீரை சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தய கீரை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெந்தயக்கீரை - 1 கட்டு (சுத்தம் செய்தது)
* துவரம் பருப்பு - 1/2 கப்
* புளி நீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரை எடுத்து, அதில் துவரம் பருப்பை போட்டு நீரில் 2
முறை கழுவி, 1 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள வெந்தயக் கீரையை
சேர்த்து சுருள வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பு மசித்து சேர்த்து ஒரு
கொதி விட வேண்டும்.
* பிறகு அதில் புளி நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மிளகாய்
தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து கலந்து, சாம்பாருக்கு தேவையான
அளவு நீரை ஊற்றி, பெருங்காயத் தூள் சேர்த்து, 5 நிமிடம் பச்சை வாசனை
போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வெந்தயக்கீரை சாம்பார்
தயார்.



Click it and Unblock the Notifications