Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வீட்டுல காய்கறி எதுவும் இல்லையா? அப்ப வீடே மணக்கும் எள்ளு குழம்பை செய்யுங்க...
Ellu Kuzhambu: உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? மதியம் சாதத்திற்கு என்ன குழம்பு செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் எள்ளு உள்ளதா? அப்படியானால் அந்த எள்ளு கொண்டு சுவையான குழம்பு செய்யுங்கள். இந்த எள்ளு குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
விருப்பமிருந்தால், இந்த குழம்புடன் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். எள்ளு விதையில் ஏராளமான சத்துக்கள் உள்ளதால், அதை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இப்படிப்பட்ட எள்ளு கொண்டு குழம்பு வைக்கும் போது, வீடே கமகமவென்று நல்ல மணத்துடன் இருக்கும்.

உங்களுக்கு எள்ளு குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எள்ளு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 25 கிராம்
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* வெள்ளை எள்ளு விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* கருப்பு எள்ளு விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, அதை பிசைந்து சாறு எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெள்ளை மற்றும் கருப்பு
எள்ளு விதைகளை சேர்த்து சில நொடிகள் நல்ல மணம் வரும் வரை வறுத்து
இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து
பொன்னிறமாக வறுத்து, அதை எள்ளுடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதில் சீரகத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்து, அதையும்
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு வறுத்த பொருட்கள் அனைத்தையும், மிக்சர் ஜாரில் போட்டு,
அத்துடன் மிளகுத் தூளை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு
தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாற்றினை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக
கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த எள்ளு பொடியை சேர்த்து கிளறி, 2-3 நிமிடம்
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான எள்ளு குழம்பு தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications