Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
பக்ரீத் ஸ்பெஷல்: பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி
பக்ரீத் ஸ்பெஷலாக உங்கள் வீட்டில் ஒரு ஸ்பெஷலான ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி/கிரேவி செய்யுங்கள்.
பக்ரீத் ஸ்பெஷலாக உங்கள் வீட்டில் ஒரு ஸ்பெஷலான ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி/கிரேவி செய்யுங்கள். இது சாதத்திஙறகு மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை நீங்கள் உங்கள் வீட்டில் விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்தால், அது உங்களுக்கு பாராட்டை வாங்கித் தரும்.

உங்களுக்கு பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 250 கிராம்
* கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 1
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெய் ஊற்றி ஆடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பின் மட்டன் துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் தயிர் சேர்த்து பிரட்டி, ஒரு கப் நீரை ஊற்றி, மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும். ஒருவேளை மட்டன் வேகாமல் இருந்தால், மீண்டும் மூடி 2 விசில் சிட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து மட்டனை கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேல் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications








