Latest Updates
-
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க
2 முட்டையும், 1 கப் கோதுமை மாவும் இருந்தா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்..
Egg Stuffed Puri Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டையைக் கொண்டு ஏதாவது ஒரு ரெசிபியை செய்து சாப்பிடுவீர்களா? அதுவும் நைட் உங்கள் வீட்டில் உள்ளோர் வித்தியாசமான டின்னர் செய்து கொடுக்க கேட்கிறார்களா?
வீட்டில் 2 முட்டையும், 1 கப் கோதுமை மாவும் இருந்தால், ஸ்டப்டு பூரி செய்யுங்கள். இந்த பூரியை காலை, இரவு, மாலை என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு முட்டை ஸ்டப்டு பூரியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை ஸ்டப்டு பூரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேக வைத்த முட்டை - 2
* கோதுமை மாவு - 1 கப்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
உள்ளே வைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் வேக வைத்த முட்டையை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு கைகளால்
கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக
பிசைந்து, மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து துருவி வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு கிளறி, 3 நிமிடம்
வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்க வேண்டும்.
* பின் பிசைந்து வைத்துள்ள மாவை மீண்டும் நன்கு பிசைந்து, சிறிது மாவை
எடுத்து உருட்டி, கோதுமை மாவில் பிரட்டி, நன்கு மெல்லியதாக தேய்த்து,
நடுவே சிறிது முட்டை கலவையை வைத்து, அப்படியே மடித்து, லேசாக தட்டிக்
கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் தேய்த்து, நடுவே
முட்டையை வைத்து மூடி லேசாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்துள்ளதைப் போட்டு முன்னும்
பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், வித்தியாசமான முட்டை
ரெசிபி தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications
