எப்பவும் ஒரே மாதிரி ஆம்லெட் செய்யாம, ஒருவாட்டி இந்த துவையல் ஆம்லெட் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்!

Posted By:

Thuvaiyal Omelette Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் முட்டை சாப்பிடுவீர்களா? அதுவும் அந்த முட்டையைக் கொண்டு ஆம்லெட் தான் அதிகம் செய்து சாப்பிடுவீர்களா? முக்கியமாக எப்போதும் ஒரே சுவையில் தான் முட்டை ஆம்லெட் போட்டு சாப்பிடுவீர்களா? சற்று புதுமையான சுவையில் ஆம்லெட் சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் துவையல் ஆம்லெட்டை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள். இந்த ஆம்லெட் சாம்பார் சாதம், புளிக்குழம்பு போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

Egg Recipes How To Make Thuvaiyal Omelette

உங்களுக்கு இந்த துவையல் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துவையல் ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* வரமிளகாய் - 5
* சீரகம் - 1 டீஸ்பூன்
* புளி - 3 துண்டு
* துருவிய தேங்காய் - 1 கப்
* கறிவேப்பிலை - 3 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* முட்டை
* நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகம், புளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த துவையலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பௌலை எடுத்துக் கொண்டு, அதில் 2 ஸ்பூன் துவையலை எடுத்துக் கொண்டு, 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி, மிதமான தீயில் வைத்து, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான துவையல் ஆம்லெட் தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 14, 2026, 13:25 [IST]
Desktop Bottom Promotion