Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
குக்கரில் முட்டை பாஸ்தா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Egg Pasta Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பாஸ்தா என்றால் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி வீட்டில் பாஸ்தா செய்ய சொல்லிக் கேட்பார்களா? பொதுவாக பாஸ்தா செய்வதாக இருந்தால், தனியாக பாஸ்தாவை வேக வைத்து, அதன் பின் மசாலாவை தனியாக தயாரித்து, பின் ஒன்றிணைந்து கிளறி செய்ய வேண்டும். இது மிகப்பெரிய ஒரு செயல்முறை.
இதனால் நிறைய பேர் பாஸ்தா செய்ய சோம்பேறித்தனப்பட்டு, அடிக்கடி செய்ய யோசிப்பார்கள். ஆனால் பாஸ்தாவை ஈஸியாக குக்கரில் செய்யலாம் தெரியுமா? இந்த முறையை தெரிந்து வைத்துக் கொண்டால், வீட்டில் உள்ளோர் கேட்டதும் 10 நிமிடத்தில் செய்துவிடலாம். முக்கியமாக முட்டை பாஸ்தாவையே குக்கரில் டக்கென்று செய்துவிடலாம்.

உங்களுக்கு முட்டை பாஸ்தாவை குக்கரில் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பாஸ்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சிக்கன் மசாலா - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பாஸ்தா - 2 கப்
* தண்ணீர் - 2 1/2 கப்
* முட்டை - 3
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும்
நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய 2 தக்காளியை சேர்த்து மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சிக்கன் மசாலா, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகுத்
தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 2 கப் பாஸ்தாவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 2 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி, கொதிக்க வைக்க
வேண்டும்.
* ஒரு கொதி வந்ததும், அதில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி, குக்கரை மூடி,
மிதமான தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கிளறினால், சுவையான முட்டை பாஸ்தா
தயார்.



Click it and Unblock the Notifications





