மதியம் மீந்து போன சாதம் இருந்தா.. நைட் இப்படி முட்டை ரைஸ் செஞ்சு சாப்பிடுங்க.. சுவை அள்ளும்..

Posted By:

Egg Rice Recipe In Tamil: மதியம் சமைத்த சாதம் மீந்து போயுள்ளதா? நைட் அந்த சாதத்திற்கு ஊற்றி சாப்பிட எதுவும் இல்லையா? அப்படியானால் மீந்து போன சாதத்தைக் கொண்டு, வீட்டில் முட்டை இருந்தால், முட்டை மசாலா ரைஸ் செய்து சாப்பிடுங்கள்.

இந்த முட்டை மசாலா ரைஸ் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதுவும் இது பேச்சுலர்கள் டக்கென்று செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். குறிப்பாக இந்த ரைஸ் குழந்தைகள் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

Egg Masala Rice How To Make a Egg Rice Recipe

உங்களுக்கு முட்டை மசாலா ரைஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மசாலா ரைஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மீந்து போன சாதம் - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 ண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* முட்டை - 3-4
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அப்படியே வாணலியில் ஓரமாக மசாலாவை தள்ளி வைத்துவிட்டு, பின் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முட்டைகளை உடைத்து ஊற்றி, முட்டைக்கு தேவையான அளவு சிறிது உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து, உடனே கிளறி விடாமல், 1 நிமிடம் கழித்து, பின் முட்டையை கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பின் மசாலாவுடன் முட்டையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் சாதத்தை சேர்த்து, உயர் தீயில் வைத்து நன்கு கிளறி விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான முட்டை மசாலா ரைஸ் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, November 23, 2024, 19:09 [IST]
Desktop Bottom Promotion