Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
முட்டை கிரேவி
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் அதற்கு சைடு டிஷ்ஷாக தேங்காய் பால் பயன்படுத்தி முட்டை கிரேவி செய்யுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் அதற்கு சைடு டிஷ்ஷாக தேங்காய் பால் பயன்படுத்தி முட்டை கிரேவி செய்யுங்கள். இந்த முட்டை கிரேவியை சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும் என்பதால் பேச்சுலர்கள் கூட இதை முயற்சிக்கலாம். இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் பால் பயன்படுத்தி முட்டை கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பால் பயன்படுத்தி செய்யும் முட்டை கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* பட்டை - 1/2 இன்ச்
* கிராம்பு - 1
வறுத்து அரைப்பதற்கு...
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 4-5
செய்முறை:
* முதலில் முட்டையை வேக வைத்து, தோலை உரித்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் தேங்காய் பாலை ஊற்றி, அத்துடன் 1/4 கப் நீரையும் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். கிரேவி ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியில் வேக வைத்த முட்டைகளை இரண்டாக வெட்டி, கிரேவியில் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், முட்டை கிரேவி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications



