Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
முட்டைய வெச்சு ஒருடைம் இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. சாதம், சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும்...
Egg Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் முட்டை இருக்குதா? முட்டையை எப்போதும் ஆம்லெட், பொடிமாஸ் என்று செய்து சாப்பிடாமல், அந்த முட்டையை வேக வைத்து, கிரேவி செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டை கிரேவி பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். மேலும் இதை 15 நிமிடத்திலேயே செய்து விடலாம். முக்கியமாக இந்த முட்டை கிரேவி சாதம், சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
உங்களுக்கு முட்டை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகு தூள் - 1 டீஸ்பூன்
* முட்டை - 5 (வேக வைத்தது)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் முட்டைகளை வேக வைத்து, 2 துண்டுகளாக வெட்டி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய்
தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குறைவான தீயில் வைத்து, 2
நிமிடம் கிளறி விட்டு பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க
வைக்க வேண்டும்.
* பின் அதில் சீரகத் தூள், மிளகுத் தூள் சேர்த்து கிளறி, வேக வைத்து
துண்டுகளாக்கப்பட்ட முட்டைகளை சேர்த்து, முதலில் 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பின்பு முட்டைகளை திருப்பிப் போட்டு 5 நிமிடம் வேக வைத்து,
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான முட்டை கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications
