Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
2 முட்டையும், 1/4 கப் மைதாவும் இருந்தா.. காலையில சட்டு-ன்னு இந்த டிபனை செய்யுங்க.. டக்கரா இருக்கும்...
Egg Crepe Recipe In Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரியான டிபனை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக, அதே சமயம் சட்டென்று ஒரு டிபனை செய்ய வேண்டுமா? அப்படியானால் 2 முட்டையும், 1/4 கப் மைதா மாவையும் வெச்சு, முட்டை க்ரீப்பை செய்யுங்கள்.
இந்த முட்டை க்ரீப் பேச்சுலர்களுக்கு ஏற்ற ரெசிபி மட்டுமின்றி, வேலைக்கு செல்பவர்கள் காலையில் 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். சொல்லப்போனால் இப்படிப்பட்ட ஒரு ரெசிபியை நீங்கள் இதுவரை சுவைத்திருக்கமாட்டீர்கள். அந்த அளவில் இது சற்று வித்தியாசமான ரெசிபி.

உங்களுக்கு முட்டை க்ரீப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை க்ரீப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 1/4 கப்
* முட்டை - 2
* பால் - 1/2 கப்புக்கும் குறைவு
* சில்லி ப்ளேக்ஸ் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் மைதாவை எடுத்து, அதில் 2
முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும்.
* பின்பு அதில் 1/2 கப்புக்கும் குறைவான அளவு பாலை ஊற்ற வேண்டும்.
* பின் அதில் 1/4 டீஸ்பூன் உப்பு, 1/4 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்
மற்றும் சிறிது கொத்தமல்லியை சேர்த்து, கட்டியில்லாமல் நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு நான்ஸ்டின் தவாவை அடுப்பில் வைத்து, தவா சூடானதும், 1
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து
ஊற்றி மூடி வைத்து, 30 நொடிகள் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து திருப்பிப் போட்டு 15 நொடிகள் வேக வைத்து
எடுத்தால், சுவையான முட்டை க்ரீப் தயார்.



Click it and Unblock the Notifications