Latest Updates
-
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம்
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க..
Egg Chilli Recipe In Tamil: உங்கள் பிள்ளைகள் அடிக்கடி வாய்க்கு ருசியாக ஏதாவது செய்து சாப்பிட கேட்பார்களா? அப்போது அவர்களுக்கு என்ன செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டையும், குடைமிளகாயும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் முட்டை சில்லி செய்து கொடுங்கள்.

இந்த முட்டை சில்லியை செய்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதோடு, அவர்களுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும் மற்றும் வயிறும் நிரம்பும். முக்கியமாக இந்த முட்டை சில்லி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை ட்ரை செய்யலாம்.
உங்களுக்கு முட்டை சில்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சில்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
முட்டை ப்ரை செய்வதற்கு...
* மைதா - 3 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சிறிது
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* வேக வைத்த முட்டை - 5
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
முட்டை சில்லி செய்வதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 1 (ஓரளவு பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
* சின்ன குடைமிளகாய் - 1 (ஓரளவு பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
* ரெட் சில்லி சாஸ் - 1 1/2 டீஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - சிறிது
* வறுத்த முட்டை
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் வேக வைத்த 5 முட்டைகளை ஓரளவு நீளத் துண்டுகளாக வெட்டிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகுத் தூள்,
மிளகாய் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, கட்டிகளின்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெயை ஊற்றி சூடானதும், துண்டுகளாக்கி வைத்துள்ள முட்டைகளை
ஒவ்வொன்றாக எடுத்து, மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொரித்து
எடுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை
மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ், தக்காளி கெட்சப்
மற்றும் சிறிது உப்பு சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி நன்கு 2
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் ப்ரை செய்த முட்டை, மிளகுத் தூள் சேர்த்து நன்கு
கிளறி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான முட்டை
சில்லி தயார்.



Click it and Unblock the Notifications
