Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Egg Bread Masala Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அவர்களுக்கு வயிறு நிரம்பும் வகையில் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் அல்லது டிபன் போன்று செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பிரட் மற்றும் முட்டை உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் முட்டை பிரட் மசாலா செய்து கொடுங்கள்.
இது மிகச்சிறந்த பேச்சுலர்கள் கூட செய்து சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும் ஒரு சுலபமான ரெசிபி. இதை மாலை வேளையில் ஸ்நாக்ஸாக மட்டுமின்றி, டிபன் போன்று காலையிலும் செய்து சாப்பிடலாம். வேலைக்கு செல்பவர்கள் இதுப்போன்ற ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

உங்களுக்கு முட்டை பிரட் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பிரட் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 8 துண்டுகள் (சதுர துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* முட்டை - 7
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 டம்ளர்
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் உப்பு,
மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு
அடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து, நன்கு
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள்,
மல்லித் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துண்டுகளாக்கி வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து
நன்கு மசாலா பிரட்டில் ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.
* பிறகு அடித்து வைத்துள்ள முட்டையை மேலே ஊற்றி நன்கு 3-4 நிமிடம்
கிளறி விட்டு இறக்கினால், சுவையான பிரட் முட்டை மசாலா தயார்.



Click it and Unblock the Notifications







