Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வீட்ல 4 பிரெட் இருந்தா இந்த மாதிரி போண்டா சுட்டு பாருங்க... டேஸ்ட் சூப்பராக இருக்கும்...!
Bread Bonda Recipe in Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு களைப்புடனும், பசியுடனும் வரும் குழந்தைகளுக்கு காபி, டீ குடிக்க கொடுக்கும் போது, அவர்களுக்கு மொறுமொறுவென்று சூடாக, சுவையாக ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் ப்ரெட் மட்டும் இருந்தால் போதும் மசாலா போண்டா போல சுவையான ப்ரெட் போண்டாவை செய்யலாம். இந்த ப்ரெட் போண்டா செய்வதற்கு எளிதாக இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதாகவும் இருக்கும். இந்த பதிவில் சுவையான ப்ரெட் போண்டாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- ப்ரெட் - 6 துண்டுகள்
- 3 உருளைக்கிழங்கு
- கேரட்
- ¼ கப் பச்சை பட்டாணி
- 1 பெரிய வெங்காயம்
- 3 பூண்டு பல்
- 1 இஞ்சி துண்டு
- 1 கிராம்பு
- 1 பட்டை
- ¼ ஸ்பூன் சோம்பு
- ½ ஸ்பூன் சீரக தூள்
- ½ ஸ்பூன் கரம் மசாலா
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு கொத்தமல்லி
- சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, மற்றும் கொத்தமல்லியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும், அதேபோல இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு வேக விடவும்.
- உருளைக்கிழங்கு வெந்ததும் அதை ஒரு கரண்டியால் மசித்து விடவும்.
- பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சூடான பின் அதில் சோம்பு, கிராம்பு, மற்றும் பட்டையை போட்டு வதக்கி நன்கு வாசம் வந்ததும் அதில் இருந்து கிராம்பு மற்றும் பட்டையை வெளியே எடுத்து விடவும்.
- பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு அதன் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பச்சை பட்டாணி, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
- பின்னர் அதில் சீரகத் தூள், கரம் மசாலா, மற்றும் மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
- பின்பு அதில் சிறிதளவு தண்ணீரை சேர்த்து அதை நன்கு கலக்கி விட்டு தண்ணீரை கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் நாம் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு நன்கு கிளறி விட்டு தண்ணீர் வற்றும் வரை வேக விடவும்.
- தண்ணீர் வற்றியவுடன் அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
- அதேசமயத்தில் ப்ரெட் துண்டுகளை ஓரமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பிறகு நாம் ஆற வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் அதில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி வைத்து கொள்ளவும்.
- பின்பு நறுக்கி வைத்திருக்கும் பிரெட் ஸ்லைஸ்களை எடுத்து அதன் இரண்டு புறங்களிலும் லேசாக தண்ணீரில் நனைத்து அதை கைகளின் நடுவே வைத்து அதில் இருக்கும் தண்ணீரை பிழிந்து விடவும்.
- பின்னர் நாம் பிடித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை ஒவ்வொன்றாக இந்த பிரெட்களின் நடுவில் வைத்து அதை நன்கு உருண்டையாக உருட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த உருண்டைகளை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- நன்கு வறுத்ததும் இதை ஒரு பாத்திரத்துக்கு மாற்றினால் சூடான, சுவையான ப்ரெட் போண்டா ரெடி!



Click it and Unblock the Notifications