Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
2 பெரிய வெங்காயம் இருந்தா போதும்... குழந்தைகளுக்கு பிடிச்ச மாதிரி ஈஸியான மற்றும் சுவையான டின்னர் செய்யலாம்...!
Onion Rice Recipe in Tamil: தினமும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான குடும்பத் தலைவிகளுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினையாகும். குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவர்களுக்கு என்ன மதிய உணவு செய்து கொடுப்பது என்பது மிகவும் குழப்பமான விஷயமாகும். பெரும்பாலும் தக்காளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவைதான் பெரும்பாலான குழந்தைகளுக்கு மதிய உணவாக இருக்கிறது.
இதையே சாப்பிட்டு நிச்சயம் குழநதைகளுக்கு போரடித்து விடும். எனவே புதுப்புது உணவுகளை சமைத்து கொடுப்பது மிகவும் அவசியம். உங்க வீட்டில் இரண்டு பெரிய வெங்காயம் இருந்தால் போதும் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த சுவையான மற்றும் எளிதான ஒரு மதிய உணவை தயார் செய்து கொடுக்கலாம். இரவில் இட்லி, தோசை மட்டுமே சாப்பிட்டு பழகியவர்களும் ஒரு மாறுதலுக்கு இந்த எளிதான சாதத்தை செய்து சாப்பிடலாம். இந்த பதிவில் எளிதான மற்றும் சுவையான வெங்காய சாதத்தை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

-1 கப் பாசுமதி அரிசி
- 1/2 கப் வறுத்த வேர்க்கடலை
- 2 பெரிய வெங்காயம்
- 4 நறுக்கிய பச்சை மிளகாய்
- ஒரு முழு பூண்டு
- 1 ஸ்பூன் கடலை பருப்ப
- 1/4 tsp மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் சீரகம்
-1 ஸ்பூன் கடுகு
- 1/4 ஸ்பூன் பெருங்காய தூள்
- உப்பு தேவையான அளவு
- 1/4 கப் புளி தண்ணீர்
- தேவையான அளவு கறிவேப்பிலை
- தேவையான அளவு கொத்தமல்லி
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
- முதலில் ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பாசுமதி அரிசி இல்லயென்றால் சாதாரண அரிசியும் பயன்படுத்தலாம்.
- பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை நறுக்கி வைத்து பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு சிறு துண்டு புளியை சுமார் பத்து நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
- பின்னர அதில் 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை நன்கு வடிகட்டி அதில் போட்டு 20 இல் இருந்து 25 நிமிடம் வரை அதை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதை சூடாக்கவும்.
- எண்ணெய் சற்று சூடானதும் அதில் கடுகு, சீரகம், கடலை பருப்பு, மற்றும் வேர்க்கடலையை போட்டு வேர்க்கடலை நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- வேர்க்கடலை பொன்னிறமானதும் அதில் நாம் உரித்து வைத்திருக்கும் பூண்டு மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து சுமார் இரண்டில் லிருந்து மூன்று நிமிடம் வரை அதை வதக்கவும்.
- மூன்று நிமிடத்திற்கு பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம், 1/2 ஸ்பூன் உப்பு, மற்றும் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
- அடுத்து அதில் கறிவேப்பிலை மற்றும் புளி தண்ணீரை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
- பின்னர் அதில் 1/4 கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் மூன்றி லிருந்து நான்கு நிமிடம் வரை கொதிக்க வைக்கவும்.
- நான்கு நிமிடத்திற்க்குப் பிறகு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை அதில் சேர்த்து பக்குவமாக சாதம் உடையாதவாரு சுமார் ரெண்டு நிமிடம் வரை அதை கிளறி விடவும்.
- 2 நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி விடவும்.
- சூப்பரா வெங்காய சாதம் ரெடி. இதை வெங்காய பிரியாணி என்று கூட சொல்லலாம்.



Click it and Unblock the Notifications











