Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சத்தான மற்றும் ருசியான... முருங்கைக்கீரை ராகி அடை
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சத்தான, அதே சமயம் சுவையான ஒரு ரெசிபியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ராகி அடை செய்து கொடுங்கள்.
இன்று காலை உங்கள் வீட்டில் என்ன செய்தென்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சத்தான, அதே சமயம் சுவையான ஒரு ரெசிபியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ராகி அடை செய்து கொடுங்கள். அதுவும் அவல் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த அவலைப் பயன்படுத்தி, அத்துடன் ராகி மாவு, முருங்கைக்கீரை சேர்த்து ஒரு ருசியான முருங்கைக்கீரை ராகி அடையை செய்யுங்கள். இந்த அடைக்கு சைடு டிஷ் எதுவுமே தேவையில்லை. அப்படியே சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்கீரை ராகி அடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை ராகி அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளை அவல் - 1/2 கப்
* ராகி மாவு - 1 கப்
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கேரட் - 1
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெள்ளை அவலை நீரில் இரண்டு முறை அலசி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் கேரட்டை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த அவலை நன்கு மென்மையாக பிசைய வேண்டும்.
* பின்பு அதில் ராகி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகய், சீரகம், துருவிய கேரட், சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் முருகைக்கீரையை நீரில் அலசிப் போட்டு நன்கு பிசைய வேண்டும்.
* பின் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அந்த மாவை கொஞ்சம் எடுத்து உருட்டிக் கொள்ள வேண்டும். பின் வாழை இலையில் எண்ணெயைத் தடவி, உருட்டிய உருண்டையை வைத்து, நீரைத் தொட்டு மெல்லிய தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், மிதமான தீயில் வைத்து, தட்டிய அடையை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான ராகி முருங்கைக்கீரை அடை தயார்.



Click it and Unblock the Notifications