Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் ரெசிபி... தீபாவளிக்கு அருமையான பாட்டி அதிரசம் எப்படி செய்யுறதனு தெரிஞ்சிக்கோங்க...!
அதிரசம் நமது ஆதிகால விருப்ப தின்பண்டம் என்றே சொல்லலாம். அந்த காலம் முதல் இந்த காலம் வரை அதிரச பிரியர்களுக்கு எப்போதும் பஞ்சம் இல்லை. எங்க பாட்டி அதிரசம் செஞ்சா எப்படி இருக்கும் தெரியுமா என ஒவ்வொரு தலைமுறையும் அவர்களின் பாட்டியை பாராட்டுவார்கள்.
ஒவ்வொரு பாட்டியும் கணவனுக்கு செய்யும் போது அனுபவம் இல்லாதவர்கள் தான். ஆனால் பேரக் குழந்தைகளுக்கு செய்யும் போது அவர்கள் அனுபவசாலிகளாக மாறியிருப்பார்கள். தீபாவளிக்கு பண்டைய கால உதிராத சுவையான அதிரசத்தை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- பச்சரிசி - 400 கிராம் அல்லது 2 கப்
- வெல்லம் - 300 கிராம் அல்லது 1 ½ கப்
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
- சுக்குப்பொடி - ¼ டீ ஸ்பூன்
- ஏலக்காய் - 4
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
- உப்பு - ஒரு சிட்டிகை
- தண்ணீர் - 50 மில்லி அல்லது ½ கப்
செய்முறை:
- பச்சரிசி உடன் தண்ணீர் சேர்த்து 3-4 மணி நேரம் நன்றாக ஊற
விடவும்.
- பின் அரிசியை 2-3 முறை நன்றாக கழுவி விட்டு சுத்தமான காட்டன்
துணியில் நிழலில் காய வைக்கவும்.
- சுத்தமான ஈரப்பதம் இல்லாத கைகளில் தொடும் போது தண்ணீர் காய்ந்து
மிதமான ஈரப்பதத்தில் கைகளில் ஓட்டும் அளவிற்கு இருக்க வேண்டும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் அரிசி, உப்பு மற்றும் ஏலக்காயை சேர்த்து நன்றாக
அரைக்கவும்.
- அரைத்த மாவை நன்றாக சலித்து மீதம் இருப்பவற்றை மீண்டும் அரைத்து
சலித்து சேர்த்து கொள்ளவும்.
- அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லம் மற்றும் ½ கப்
தண்ணீர் சேர்த்து கரையவிடவும்.
- வெல்லம் கரைந்ததும் அதை வடித்து மீண்டும் அடுப்பில் வைத்து அதனுடன்
சுக்குத் தூளை சேர்க்கவும்.
- வெல்லப்பாகு நீரில் சேர்க்கும் போது கரையாமல் கைகளில் எடுக்க வர
வேண்டும்.
- பதம் வந்ததும் அடுப்பை அணைத்து நெய்யை சேர்த்து கிளறவும்.
- பின் சலித்து வைத்த அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து
கிளறிவும்.
- நன்றாக கிளறிய பின் மேற்பரப்பு காயாமல் இருக்க சிறிதளவு நெய்
சேர்த்து மூடி வைக்கவும்.
- இதை 16 மணி நேரம் முதல் இரண்டு நாள் வரை ஊற விடலாம்.
- பின் வாணலியை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
சேர்த்து மிதமான தீயில் காய விடவும்.
- அதிரச மாவை சின்ன உருண்டையாக உருட்டி எண்ணெய் தடவிய வாழை இலை அல்லது
பால் கவரில் வைத்து அழுத்தி வைத்து கொள்ளவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அழுத்தி வைத்திருக்கும் மாவை எண்ணெய் சேர்த்து
பொரிக்கவும்.
- இரண்டு புறமும் நன்றாக சிவக்கும் படி பொரித்து எடுக்கவும்.
- எடுக்கும் போது கரண்டியின் மீது அதிரசத்தை வைத்து இன்னொரு
கரண்டியால் அழுத்தி எண்ணெயை பிழிந்து எடுத்தால் சுவையான அதிரசம்
ரெடி!



Click it and Unblock the Notifications